கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மட்டக்களப்பு விஜயம்


(சிவம்)
அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் தேசிய திட்டத்தின் கீழ் முதலில் மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ;ட வித்தியாலயத்தில் ரூபாய் 17 மில்லியன் செலவில் கட்டி முடிக்கப்பட்ட ஆரம்ப கற்றல் வள நிலையம் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் இன்று (19) திறந்து வைத்ததோடு அதிதிகள் வருகை நினைவுப் புத்தகத்திலும்; கையெழுத்திட்டார்.

பின்பு மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை வளாகத்தில் உள்ள இந்து ஆலயத்தில் இடம்பெற்ற பூஜையில் கலந்து கொண்டு ரூபாய் 35 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த கலாசாலைக்கு 3 மாடி நிர்வாகக் கட்டிடம் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.

தொடர்ந்து நல்லையா மண்டபத்தில் கலாசலையின் அதிபர் பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டதோடு அதிபரினால் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாளேந்திரன், அலிசாகிர் மௌலானா, மட்டக்களப்பு அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், மாநகர முதல்வர் தி.சரவணபவன் , ஐ.தே.க. மாவட்ட அமைப்பாளர் வி. மகேஸ்வரன், முன்னாள் பிரதியமைச்சர் கே. கணேசமூர்த்தி, மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன், மாகாண உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்) ரி.எஸ்.டி. பீரிஸ், பொறியியலாளர் பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.