அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட நிதி நிறுவனங்களில் மாத்திரம் கடனைப்பெற்றுக்கொள்ளவும்- மத்திய வங்கி ஆளுநர்

நிதி நிறுவனங்கள் மூலம் கடன்களை பெற பொது மக்கள் நாடுகின்றபோது தாம் பெறுகின்ற கடன்கள் அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் மூலம்தான் பெறப்படுகின்றதா என்று பரிசிலித்து கொண்டு கடனைப் பெற்றுக்கொள்வது தற்போது சில பிரதேசங்களில் நிலவுகின்ற கடன் நெருக்கடி பிரச்சினைகளில் இருந்து மக்கள் தவிர்ந்து கொள்ள முடியுமென்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.
கடன் பிரச்சினைகளிலிருந்து மக்கள் எவ்வாறு தணிந்து கொண்டு அக்கடனை எவ்வாறு அபிவிருத்திக்குறியதாக மாற்ற முடியுமென்பது தொடர்பிலான செயலமர்வு நேற்று திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

வாடிக்கையாளர்கள் கடனை பெறும் போது அக்கடன் குறி;த்த தகவல்களை தெளிவாக அறிய உரிமையுள்ளது. ஆவற்றை அதளிவாக அறிந்து கொள்ளல் வேண்டும். கடன் நெருக்கடியால் ஏற்படும் பிரச்சினைகளும் அதற்கான காரணம் மற்றும் தீர்வுகளை பெற்றுக்கொள்ளவே நாம் வருகை தந்துள்ளோம். அனுமதிப்பத்திரம் உள்ள நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய வங்கிக்கு காணப்படுகின்றது. இருப்பினும் அனுமதிப்பத்திரம் இல்லாத முறையற்ற நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய வங்கிக்கு இல்லை. எனவே கடன்களை பெறுகின்றபோது அனுமதிப்பத்திரம் உள்ள நிறுவனங்களை நாடுவது தேவையற்ற பிரச்சினை மற்றும் நெருக்கடிகளில் இருந்து மக்கள் விடுபட முடியுமென்று இதன்போது மத்தி வங்கி ஆளுநர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மத்திய வங்கியின் அதிகாரிகள் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார ,மட்டக்களப்பு மற்றும் அம்பாறை அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், வெளிக்கள அரச உத்தியோகத்தர்கள், பெண்கள் அமைப்புக்கள், வர்த்தக சம்மேளன பிரதி நிதிகள், சிவிலமைப்புக்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.