கோவில் போரதீவு கண்ணகியம்மன் ஆலயத்திலுள்ள பழமைவாய்ந்த அரசமரம் வெட்டப்பட்டமை குறித்து மக்கள் விமர்சனம்



கோவில் போரதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் ஆலயத்தின் தலவிருட்சமாக திகழ்ந்த  அரசமரம் கிராம  மக்களின் கருத்துக்கள் கேட்கப்படாமல்  வெட்டப்பட்டமை குறித்து மக்கள் விமர்சனம் தெரிவிக்கின்றனர் .

இவ் அரசமரமானது     பல  வருட  பழமையானதும் , பக்தர்கள்   வெள்ளிக்கிழமைகளில்  பால் ஊற்றி நாகதம்பிரானை  வழிபடுவதாகவும் . 

கோவில்போரதீவு மக்கள் ஆதி தொட்டு புதிர்பொங்கல் செய்ததும் இந்த நாகதம்பிரான் இருந்த மரத்தடியில்தான் பழைய ஆலயம் இருந்த போது விநாயகப் பானை பொங்கலுக்கான நெற் குத்து(வட்டுக்குத்து)  இந்த இடத்தில்தான் நடைபெற்றது. 

இந்த ஆலயத்தில் சுற்றுமதில் அமைத்து தாருங்கள் என்று ஆலய நிருவாகம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஆலய அரசமரத்தை சுற்றி அமைக்கப்பட்ட ரூபா 550000/= பெறுமதியான சில்வர் அலுமினியத்தால் அலங்கரிக்கப்பட்ட சுற்றுமதில் 1வருடம் ஆவதற்குள் இவ்வாறு சிதைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர் .