மண்டூர் சங்கர்புரம் மாணவன் மாகாண மட்டத்தில் முதலிடம் : சிங்கபூரில் நடைபெறவுள்ள கணிதப் புதிர் போட்டியில் பங்குபற்றுவதற்குத் தகுதி


சர்வதேச மட்டத்தில் நடத்தப்படுகின்ற கணிதப் புதிர் போட்டியில்   மண்டூர் சங்கர்பூரம்  விக்னேஸ்வரா மகாவித்தியாலய மாணவன் சதசானந்தம் அஜந்தன் எனும் மாணவன் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று  வெற்றி பெற்றுள்ளார்.

குறித்த மாணவன் சிங்கபூரில் நடைபெறவுள்ள கணிதப் புதிர் போட்டியில் பங்குபற்றுவதற்குத் தகுதி பெற்றுள்ளார்.


இந்த மாணவனை பயிற்றுவித்த ஆசிரியர் பே.யோகேஸ்வரன்  மற்றும் அதிபர் சபேசன்  ஆகியோரை பாடசாலைச் சமூகம் பாராட்டியுள்ளது.

 கணித பாட  ஆசிரியர் பே.யோகேஸ்வரன்   அவர்களின் முயற்சியால் 2016 ஆண்டு    சாதாரண தர பரீட்சையில்  கணித பாடத்தில் தோற்றிய அனைத்து  மாணவர்களும்  சித்தியெய்திருந்தனர். இது 2016 ஆண்டில்  மாகாண மட்டத்தில் சாதனையாகவும் இருந்தது.
இவ்  கணித பாட  ஆசிரியர் சங்கர்புரம் சமூக பொருளாதார கல்வி அபிவிருத்தி அமைப்புக்கு தலைவராக இருந்து பல சேவைகளை செய்து வருகின்றார் .

மேலும், இந்த பாடசாலையில் சங்காரவேல் பவுண்டேஷன் அமைப்பு        மாணவர்களுக்கு இலவசமாக கணிதம் விஞ்ஞானம் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான    வகுப்புக்களை  2016 ஆண்டிலிருந்து  நடாத்திவருகின்றனர்.

இப் பகுதி  கல்வி அபிவிருத்திக்கு  கடந்த இரண்டரை வருடங்காலாக  சங்காரவேல் பவுண்டேஷன்  அமைப்பு  பத்து லட்சம் ரூபா  அளவிலான நிதியை  வழங்கியுள்ளது