தம்பலவத்தை கிராமத்திலிருந்து கல்வியியலாளர் சேவைக்கு தெரிவான மண்டூர் 13 சங்கர்புரம் விக்னேஸ்வரா ம.வி. ஆசிரியர்



மண்டூர் தம்பலவத்தைக் கிராமத்தில் பிறந்து தற்போது சேனைக்குடியிருப்பில் வசித்து வருபவரும் மட்/பட்/மண்டூர் 13  சங்கர்புரம் விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் பிரதி அதிபராகவும் ஆங்கிலபாட ஆசிரியராகவும் கடமையாற்றி வருபவருமான  செல்வராசா தசரதன் அவர்கள் இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்குத் தெரிவாகி பாடசாலைக்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

 சேவை மனப்பான்மையும் தொடர் கற்றலும் கொண்டவருமான இவர் கடந்தகாலங்களில் கல்வியியல் முதுமாணி, கலைமாணி, ஆங்கிலத்தில் உயர் தேசிய டிப்ளோமா, கற்பித்தலில் தேசிய டிப்ளோமா போன்ற பட்டங்களைப் பெற்றவராகத் திகழ்கின்றார்.

மேற்படி திறன்கொண்ட ஆசிரியரான  செல்வராசா தசரதன் அவர்கள் இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையில் சித்தி பெற்றுள்ளமையானது எங்களது சமுகத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளதுடன் இவர் மென்மேலும் பல பதவியுயர்வுகள் பெற்றுச் சேவையாற்ற வேண்டும் என பாடசாலை, சமூகம்,பழையமாணவர்கள் மற்றும் நியூ ஸ்டார் விளையாட்டுக்கழகம் சார்பாக அனைவரும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர்.

ஆசிரியர் பாடசாலையில் வைத்து கௌரவிக்கப்பட்டதை படங்களில் காணலாம்.