சுகாதாரத் தொழிலாளர்களின் தொற்றா நோய்களுக்கான வைத்தியப் பரிசோதனை


(சிவம்)

மட்டக்களப்பு மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளாகளின் நலன் கருதி தொற்றா நோய்களுக்கான வைத்தியப் பரிசோதனைகள் இன்று (29) பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றன.

மாநகர சபையின் இரண்டாவது சுகாதார அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் குறித்த தொழிலாளர்களுக்கு சுகாதார உடற்கூற்று தகுதிகாண் பரிசோதனைகளில் உயர் குருதியமுக்கம், குருதியில் உள்ள சீனியின் அளவு, குருதியில் உள்ள கொழுப்பின் அளவு உள்ளிட்ட பௌதீகக் கட்டமைப்புக்கள் பரிசோதிக்கப்பட்டன.

இருதயபுரம், கொக்குவில், மாமாங்கம், கல்லடி, நாவற்குடா, வலையிறவு மற்றும் டெங்குக் குழு சுகாதார ஊழியர்களின் வைத்தியப் பரிசோதனைகளை மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலக வைத்தியக் கலாநிதி கே.கிரிசுதன் மற்றும் மருத்துவ மாதுக்கள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த நோய்களுக்கான மருந்துகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாநகர முதல்வர் தி.சரவணபவன், சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், மாநகர சபையின் சுகாதார நிலையியற் குழுவின் உறுப்பினர் ஆர்;. அசோக், ஆணையாளர் என்.மணிவண்ணன், பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன், பொறியியலாளர் த.தேவதீபன், சுகாதாரப் பிரிவின் பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.