இந்து விவகார பிரதி அமைச்சு பதவியை ராஜினாமா செய்தார் காதர் மஸ்த்தான்


(கனகராசா சரவணன்)
இந்து சம்மேளனத்திற்கும் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையையடுத்து; காதர் மஸ்தானுக்கு வழங்கிய இந்து விவகார பிரதி அமைச்சர் பதவியை இன்று வியாழக்கிழமை பறிக்கப்பட்டுள்ளதாகவும் இந்து மக்களுக்கு கிடைத்த வெற்றி எனவும் இந்து சம்மேளனத்தின் தலைவர் நார. அருன்காந்த்த தெரிவித்தார் 

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இந்து விவகார பிரதி அமைச்சராக வட மாகாண பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு வழங்கிய இந்து விவகார பிரதி அமைச்சர் பதவியையடுத்து இந்து அமைப்புக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டங்கள் இடம் பெற்றுவருகின்றது. 

இந்த நிலையில் இந்து சம்மேளனத்தின் தலைவர் நரா. அருன்காந்த் தலைமையிலான உயர்மட்டகுழுவிற்கும் ஜனாதிபதியின் இணைப்பு செயலானருக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையையடுத்து பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் உடனடியாக ஜனாதிபதி செயலகத்திற்கு அழைக்கப்பட்டு அவரிடம் இருந்து இராஜனாமா கடிதத்தை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது 
இதன் பிரகாரம் தற்போது இந்து விவகார பிரதி அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான வெற்றிடத்தை விரைவாக பூர்த்தி செய்யப்படும் எனவும் அதற்கான வர்த்தமானி வெளிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார் 

இந்த செயற்பாடு இந்து சம்மேளனத்தின் இராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்பதுடன் இந்து சம்மேளனத்துடன் நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் நம்பிக்கை வைத்து வழிநடாத்திய அனைத்து இந்து பெரியாருக்கும் இந்துக்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் தெரிவித்தர்.