அவுஸ்திரேலிய அகதிகள் மத்தியில் பெரும் அச்சம் ! வழக்கு நிராகரிப்பால் மீண்டும் நாடுகடத்தப்படவுள்ள இலங்கைத் தமிழ் குடும்பம் !


மெல்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் முகாமில் வைக்கப்பட்டுள்ள நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தின் நாடுகடத்தலைத் தடைசெய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

புகலிடம்கோரி ஆஸ்திரேலியா வந்த நடேசலிங்கம்-பிரியா தம்பதி மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களின் 2 வயது மற்றும் பத்துமாத குழந்தைகள் பல காலமாக குயின்ஸ்லாந்தின் Biloela-வில் வாழ்ந்து வந்த நிலையில், அவர்களது bridging visa கடந்த தை - மாசி மாதமளவில் காலாவதியாகியிருந்ததையடுத்து, அவர்கள் நாடு கடத்தப்படும் நோக்கில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் நடேசலிங்கம்-பிரியா குடும்பம் நாடுகடத்தப்படக்கூடாதென வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை கடந்த மாதம் நடைபெற்றிருந்தநிலையில் இவ்வழக்கின் மீதான தீர்ப்பை அறிவித்துள்ள குறித்த குடும்பத்தின் நாடுகடத்தலைத் தடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை நிராகரித்துள்ளது.

இதன்காரணமாக நடேசலிங்கம்-பிரியா குடும்பம் விரைவில் நாடுகடத்தப்படலாம் என அகதிகள் செயற்பாட்டாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.