பாசிக்குடாவில் இடம்பெற்ற அலங்கார தோரணை போட்டி



கிழக்கு மாகாண நட்சத்திர விடுதிகள் சங்க தலைவர் எஸ்.றொசான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டி.சுசந்த, பாசிக்குடா சுற்றுலாத்துறை முகாமையாளர் எஸ்.மாஹீர், பாசிக்குடா ஹோட்டல்களின் முகாமையாளர்கள், ஊழியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத கழிவுப் பொருட்களை கொண்டு அலங்கார தோரணை அமைக்கும் போட்டி வருடா வருடம் நடைபெற்று வருகின்றது. இதில் ஏழு ஹோட்டல்கள் போட்டியில் கலந்து கொண்டது.

இதில் முதலாது இடத்தினை உஹாபேய் ஹோட்டல் பெற்றுக் கொண்டு இருபத்தையாயிரம் ரூபாய் பணப் பரிசினையும், இரண்டாவது இடத்தினை த ஹாம் ஹோட்டல் பெற்றுக் கொண்டு பதினையாயிரம் ரூபாய் பணப் பரிசினையும், மூன்றாவது இடத்தினை அனந்தயா ஹோட்டல் பெற்றுக் கொண்டு பத்தாயிரம் ரூபாய் பணப் பரிசினையும் பெற்றுக் கொண்டது.

இப்போட்டியில் அமைக்கப்பட்ட அலங்கார தோரணையினை பார்வையிடுவதற்கு சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை கலந்து கொண்டனர். இதில் வெளிநாட்டவர்களின் பார்வையிட்டதுடன், இது அவர்களை கவரும் வகையில் காணப்பட்டது.