பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சடங்கும் துலாக்காவடி நிகழ்வும்


(செ.துஜியந்தன் )

இன்று பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய துலாக்காவடி நிகழ்வு
பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 21 ஆம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

பிரதம பூசகர் சிவத் திரு மு.வை. வரதராஜன் தலைமையில் தொடர்ந்து ஏழு தினங்கள் திருக்குளரித்தி உற்சவம் நடைபெறவுள்ளது.
இதில் இன்று திங்கட்கிழமை 25 ஆம் திகதி பி.ப. 6 மணியளவில்  பக்திப்பரவசமூட்டும் துலாக்காவடி வைபவம் இடம்பெற்றது.

26 ஆம் திகதி மாலை 6 மணிக்கு அம்மனின் திருக்குளிர்த்திக்கால் வெட்டும் வைபவமும் நள்ளிரவு 12 மணிக்கு அம்மனின் தவநிலை வைபவமும் நடைபெற்று.

27 ஆம் திகதி காலை 9மணிக்கு அம்மனின் விநாயகப்பானை எழுந்தருளலும், வட்டுக்குத்துதல் வைபவம், மாலை 5மணிக்கு அம்மனின் திருக்குழந்தைகளை அழைத்துவருதலும், சக்கரையமுது வைபவமும் இடம்பெற்று தொடர்ந்து  இரவு 7 மணிக்கு சிலம்பொலி, உடுக்கை, மங்கல வாத்தியங்கள் முழங்க திருக்குளிர்த்தி பாடப்பட்டு அதன்பின் சமூத்திரத்தில் கும்பம் சொரிதல் இடம்பெற்று இறுதி நிகழ்வாக அம்மனுக்கு வாழிபாடுதலுடன்  திருக்கதவு அடைத்து உற்சவம் இனிதே நிறைவுவடைந்தது.

26 ஆம் திகதி இரவு மாரியம்மன் ஆலய இந்து இளைஞர் மன்றத்தினால்  கல்முனை பிரதேசத்திற்குட்பட்ட அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவமும், கலை நிகழ்வுகளும் இடம்பெற்று. ஆலய உற்சவ காலங்களில் சமய சொற்பொழிவுகளும், கூட்டுப்பிராத்தனைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.