மட்டக்களப்பு மாநகர சபை நலன்புரி அமைப்பின் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு


(சிவம்)

புனித ரமழான் மாதத்தை பெருமைப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையின் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு இன்று மாலை (12) நகர மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபை உத்தியோகத்தர்களின் நலன்புரி அமைப்பு ஏற்பாடு செய்த இந்நிகழ்வில்

நகர ஜாமியூ சலாம் பள்ளிவாசலின் பிதம இமாம் நியாஸ் அஹமட் மௌலவியினால் புனித நோன்பு காலத்தில் நோன்பிருப்போர் பின்பற்றும் கடமைகள் மற்றும்; தனவந்தர்களும் வர்த்தகர்களும றமழான் மாதத்தில் மட்டுமல்லாமல் இறைவன் படைத்த முழு மாதத்திலும் தனது மாதாந்த வருமானத்தில் 2.5 வீதத்தை ஏழைகளுக்கு கொடுத்து உதவ வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தனதுரையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இத்தகைய ஒன்றுகூடல்களின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினார்.

இப்தார் நோன்பு திறப்பதற்கான அதான் ஒலியை மட்டக்களப்பு இஸ்லாமிய வர்த்தக சங்கத்தின் தலைவர் கலீல் (பிலால்) எழுப்பியதோடு மாநகரச் செயலாளர் எம்.ஆர்;.சியாஹூல் ஹக் நன்றியுரையை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் பிரதி முதல்வர் க.சத்தியசிலன், மாநகர சபையின் உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் என்.மணிவண்ணன், பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ். சித்திரவேல், மட்டக்களப்பு வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.