மட்டக்களப்பு மாநகர முதல்வர் மற்றும் மாநகர பொறியியலாளரின் அதிரடி நடவடிக்கையினால் ஏற்படவிருந்த பாரிய தீ அனர்த்தம் கட்டுப்பாட்டில்


(சிவம்)

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவனின் ஆலோசனைக்கமைய மாநகர பொறியியலாளர் த. தேவதீபனின் தொழில்நுட்ப வழிகாட்டலின் கீழ் திருப்பெருந்துறை கழிவு முகாமைத்துவத்துவ நிலையத்தில் ஏற்படவிருந்த பாரிய தீ நேற்று மாலை (28) கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

தற்போது அதிக வெப்பமான காலநிலை காணப்படுவதால் கழிவு முகாமைத்துவத்துவத்தின் அருகில் உள்ள வளாகப் பகுதியிலிருந்து பரவிய தீயே குறித்த கழிவு முகாதை;தவ பிரதேசத்திற்கு பரவியுள்ளது. எனினும் பிரதேச மக்கள் விழிப்புடன் இருந்தமையே கட்டுப்பாட்டிற்குக் காரணமாகவிருந்தது.

குறித்த வளவின் உரிடையாளர்கள் அனர்த்த நேரத்தில் அங்கிருக்கவில்லை பின்பு குறிப்பிட்ட நபர்களுக்கு  தெரிவிக்கப்பட்டது. எனினும் தீ ஏற்பட காரணமாகவிருந்த தீப்பொறி வளிமண்டலத்தில் உள்ள காலநிலையினால் காற்றில் பரவியிருக்கலாம் என பொறியிலாளர் தெரிவித்தார்.

மாநகர தீயணைப்பப் பிரிவினர் உடன் விரைந்து செயற்பட்டமையினால் தீ முற்றாகக் கட்டப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. மாநகர அனர்த்த மகாமைத்துவ பிரிவினருக்கு அதிரடி நடவடிக்கையை மாநகர முதல்வர் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.

சம்பவ இடத்திற்கு சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன் மற்றும் மாநகர சபை உறுப்பினாகளான மா.சண்முகலிங்கம், த.சிவானந்தராஜா மற்றும் இவோட்டின் குமார் ஆகியோர் விரைந்து சென்று நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.