அஞ்சல் சேவை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில்


நிலையப் பொறுப்பதிகாரிகளின் புதிய நியமனங்களை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் சேவை பணியாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இரு தினங்களுக்கு முன்னெடுக்கப்படும் என அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் எச்.கே காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, அஞ்சல் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அஞ்சல் மற்றும் இஸ்லாமிய கலாசார அலுவல்கள் அமைச்சர் ஏ.எச்.எம் ஹாலீம் கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வேதனத்தை அதிகரிக்குமாறு கோரி நீர்வழங்கல் துறை தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

இதன் காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேதன அதிகரிப்பு செய்யப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீர் வழங்கல் தொழிற்சங்க ஒன்றிணைந்த கூட்டமைப்பு இந்த தொழிற்சங்க போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில் தமது கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்காவிடில் போராட்டம் தொடரும் என அந்த கூட்டமைப்பின் இணைப்பாளர் உபாலி ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.