கிழக்கில் பொலிசார் பக்கச்சர்பாக செயற்படுகின்றனர்


(கனகராசா சரவணன்)

கிழக்கில் அரச மற்றும் பொது இடங்கள், ஏரிகள், குளங்ககளின் நிலங்களுக்கு போலி ஆவணங்களுடன் நிலத்தை ஆக்கிரமித்துவரும்  நில ஆக்கிரமிப்பாளர்களை தடுத்து அரச சொத்துக்களை  தமிழ் மக்கள் பாதுகாத்து வருகின்றனர் இந் நிலையில்; நீதியை நிலை நாட்டவேண்டிய பொலிசார் பக்கச் சார்பாக செயற்படுகின்றது கடும் கண்டணத்துக்குரியது என முன்னாள்  காரைதீவு பிரதேச சபை தவிசாளர். இராசையா செல்லையா தெரிவித்தார் .

ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளரை சமாதானம் பேச வருமாறு பொலிஸ் நிலையத்தில் வரவழைத்து அவரை கைது செய்த பொலிசாரின் செயற்பாட்டை  கண்டித்து முன்னாள்  காரைதீவு பிரதேச சபை தவிசாளர். இராசையா செல்லையா ஊடக அறிக்கை ஒன்றை இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அக்கரைப்பற்று சின்முகத்து வாரம் களப்பு நில பகுதியை போலி ஆவணங்களுடன் வேறு பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோது அதனை தடுக்க முற்பட்ட தமிழ் மக்களுக்கும் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பையடுத்து  அங்கு பதட்மான சூழ்நிலை ஏற்பட்டது

இதனையடுத்து அங்கு சமாதானம் செய்ய சென்ற ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் சமூகசேவையாளர் கருணாகரன் ஆகியோர் மீது இனவன்முறை மற்றும் பல பெய்யான குற்றச்சாட்டுக்கள்  சோடிக்கப்பட்டு அவர்களை சமாதானம் பேச பொலிஸ் நியைத்துக்கு வருமாறு அழைக்கப்பட்டு அவர்களை கைது செய்துள்ளமை பக்கச்சார்பான பொலிசரின்  செயற்பாடு  கண்டிக்கப்படவேண்டும் .

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் கிழக்கில் தமிழர்கள் பிரதேசங்களில் உள்ள அரச காணிகள், மற்றும் களப்பு, ஏரிகள், குளங்களின் நிலங்களை தமிழர்கள் அல்லாதோரால் சில அரசியல் வாதிகளின் பின்புலத்தோடு நில ஆக்கிரமிக்கப்படுகின்றது.

இதனால் மீனவர்க் மற்றும் விவசாயிகளின் அன்றாட ஜீவனோபாயம் பெரிதும் பாதிக்கப்படுகின்றது இதனை தமிழ் ரசியல் வாதிகள் கண்டும் காணாத நிலையிலே உள்ளனர். இந்த நிலையில் நில ஆக்கிரமிப்பாளர்களை தமிழ் மக்களால் தடுத்து நிறுத்த முற்படும் போது பொலிசார் பக்கசார்பாக செயற்பட்டு அரச நிலத்தை பாதுகாக்கும் தமிழ் மக்கள் மீது பெய்க் குற்றம் சுமத்தி கைது செய்கின்றனர்

பொலிசாரின் இவ்வாறான செயற்பாடு கண்டிக்கத்தக்கதுடன் நீதியை குழிதோண்டிப் புதைக்கும் ஒரு செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம். ஏன ந்தஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.