கிழக்கு உட்பட 'டிஸ்' தொலைக்காட்சி பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை! இணைப்புக்கள் துண்டிக்கப்படும்!


நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள சட்டவிரோதமான டிஸ் தொலைக்காட்சி இணைப்புக்களை தடை செய்யுமாறு கோரி தேசிய இணையத்தள ஊடகவியலாளர்களுக்கான தேசிய அமைப்பானது இன்று தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றினை கையளித்துள்ளது.

இது தொடர்பில் இணையதள ஊடகவியலாளர்களுக்கான தேசிய அமைப்பின் தலைவர் சதுரங்க தெரிவிக்கையில்,

தற்போது நாட்டில் காணப்படும் சட்டவிரோத டிஸ் மற்றும் கேபில் தொலைக்காட்சி இணைப்புக்களினால் நாட்டின் தேசிய பாதுகாப்பு பாதிப்படைந்துள்ளது. அதேபோன்று தேசிய வரிவளங்கல் செயற்பாடுகளும் பாதிப்படைந்துள்ளது.

மேலும் குறித்த இந்த இணைப்புகளுக்கான தனியான கம்பங்கள் எதுவும் இல்லை. இதனால் கேபல் தொலைக்காட்சியுடன் சம்பந்தப்பட்ட இணைப்புக்கள் மின்சார கம்பங்களில் தொடர்புபடுத்தப்படுகின்றது.

இவ்வாறான சட்டவிரோத டிஸ் தொலைகாட்சி இணைப்புக்கள் வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய மாகாணங்களிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனை வலியுறுத்திய தேசிய இணையத்தள ஊடகவியலாளர்களுக்கான தேசிய அமைப்பானது இன்று தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு கடிதமென்றினை கையளித்துள்ளது.

எனவ‍ே சட்டவிரோத டிஸ், கேபல் தொலைகாட்சி இணைப்புக்களுக்கு தொலை தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார்.