வீதிகள் மற்றும் வடிகான்கள் புனரமைப்புப் பற்றி தெளிவூட்டும் மக்கள் சந்திப்பு

மட்டக்களப்பு மாநகரசபை வட்டாரங்களின் அபிவிருத்தியை முன்னெடுக்கும் நோக்கோடும் 2019 ஆம் ஆண்டுக்கான பாதீடு தயாரித்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக  வீதிகள் மற்றும் வடிகான்கள புனரமைப்பது பற்றி விளக்கமளிக்கும் மக்கள் சந்திப்பு இன்று (18) கல்லடி, நொச்சிமுனை கொலனிப் பகுதியில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட 20 வட்டாரங்களிலும் வினைத்திறன் மிக்க சேவையை முன்னெடுக்கும் நோக்கோடு வீதிகள் மற்றும் வடிகான்கள் புனரமைத்தல் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள சகல உறுப்பினர்களுக்கும் வேலைத்திட்டங்கனை முன்னிவைப்படுத்தி சமர்ப்பிக்கும் திட்ட மாதிரிப் படிவங்கள் அனுப்பப்பட்டுள்ளன. 

மாநகர சபை உறுப்பினர்களின் வேலைத்திட்ட விபரங்களை முன்னிலைப்படுத்தி யூன் மாதம் 30 ஆம் திகதிக்குள் தங்களது சிபார்சுக்கு ஏற்ப கையளிக்க வேண்டும் எனவும் வேலைத் திட்டங்களை அவதானிப்பதற்காகவும் மற்றும் குறிப்பிடுவதற்காகவும் திட்ட கண்காணிப்புக் குழுக்களை அமைக்குமாறும் மாநகர முதல்வர் தி.சரவணபவன் கேட்டுக் கொண்டார்.

கல்லடி, நொச்சிமுனை, மஞ்சந்தொடுவாய்களில் உள்ள விதிகள் மற்றும் வடிகான்களின் நிலமைகள் அவதானிக்கப்பட்டு குறிப்பிடப்பட்டன.
இச்சந்திப்பில் சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், வேலைகள் மற்றும் அபிவிருத்திக் குழுவின் தலைவர் து.மதன், நொச்சிமுனை வட்டார உறுப்பினர் செல்வி மனோகர், அபிவிருத்தி உத்தியோகத்தர் சுகந்தினி கிருஷ;ணன், கிராமசேவகர் கிருஷ;ணவேணி அருணாச்சலம் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.