கொந்தளிக்கும் கிழக்கு அமைப்புக்கள்! பெண்ணொருவர் பலரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்து கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம்!


திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் பிரதேசத்தின் மிகவும் பின்தங்கிய கிராமமான பாட்டாளிபுரத்தில் பெண்ணெருவர் துஸ்பிரயோகப்படுத்தப்பட்டதுடன் அவரை கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் மற்றும் நீதித்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்டத்தில் செயற்படும் பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இதுகுறித்துத் தெரிவித்துள்ள அவர்கள்,

குறித்த பெண், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் கழுத்தறுபட்ட நிலையில் ஆபத்தான சூழலில் மீட்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் பொலிசாரின் உதவியுடன் தோப்பூர் வைத்தியசாலை ஊடாக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

அவரால் பேசமுடியாத நிலமை உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்விடயத்தில் பல இளைஞர்கள் பங்குகொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த பெண்ணை அவர்கள் பலாத்காரம் செய்து இறுதியில் கழுத்தை அறுத்து கொலை செய்யவும் துணிந்துள்ளார்கள். இந்த நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற சூழலில் இந்நிகழ்வானது சட்டம் ஒழுங்கை மிகவும் கேள்விக்குட்படுத்தியுள்ளது.

எனவே இது விடயத்தில் பொலிசாரும் நீதித்துறையும் விரைந்து நேர்மையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 5 பிள்ளைகளின் தயான குறித்த விதவைப்பெண்ணை பலர்சேர்ந்து இவ்வாறு சிதைத்து அவரைக் கொல்லத் துணிந்துள்ளமை பெண்களின் பாதுகாப்புக்குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

என குறித்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஏழை மக்கள் வாழும் கிராமங்களை இவ்வாறான நாசகார எண்ணம் கொண்டவர்கள் நாய் நரிபோல் தேடி அலைகின்றனர். இவ்வாறானவர்களை சமூகத்தில் தொடர்ந்தும் உலாவ விட்டால் மேலும் பல பெண்ணகள் பாதிக்கப்படாலாம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, இந்நிகழ்வுகள் பல பெண்களின் பாதுகாப்புக்குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இவ்விடயத்தில் இன மத சாதி ஏற்றத்ததாழ்வு பாராமல் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் எனவும் அவ் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.