மாணவி றெஜினாவின் கொலையை வன்மையாகக் கண்டிப்பதோடு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படவேண்டும்


பாடசாலைப் பாலகி றெஜினா கொலைசெய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் பாடசலை மாணவி கொலைசெய்யப்பட்டமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம். அத்தோடு கொலைக் காரணமானவர்களுக்கு அதிஉச்ச தண்டனை வழங்க வேண்டும் என நீதித்துறையைக் கேட்டுக்கொள்கிள்றோம்.

இவ்வாறு ஊடக அறிக்கை மூலம் வேண்கோள் விடுத்துள்ளது இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்.

அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது....

பாடசாலை மாணவர்கள் கொலை செய்யப்படுவதும், பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. இதற்கு இந்நாட்டில் இதுவரையில் உடனடித்தண்டனைகள் எதுவும் வழங்கப்படவில்லை. ஆகையால் இத்தகைய செயல்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. இவற்றை இல்லாதொழிக்க குற்றவாளிகளுக்கு உடனடியாக மிகவும் உச்ச தண்டனை வழங்க வேண்டும்.

குற்றவாளிகளுக்கு தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டு அவை மறந்துபோகும் அளவுக்கு எம்நாட்டின் நீதி நடவடிக்கைகள் உள்ளன. பாடசாலைப் பாலகிககள் தொடர்ந்து கொல்லப்படுவதும், பாலியல்ரீதியாக துன்புறுத்தப்படுவதும் அடியோடு இல்லாதொழிக்க சட்டத்துறை சார்ந்தவர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவொருக்கு எதிராக உடனடித்தீர்ப்பு வழங்கவேண்டும். அவ்வாறு வழங்கினால்தான் ஏனையவர்களுக்கும் அதுவொரு பாடமாக அமையும்.

இதனையே மக்களும் ஒவ்வொரு சம்பவத்தின் பின்னரும் பேசிக்கொள்கின்றனர். அதுமட்டுமன்றி முன்பொருகாலத்தில் இத்தகையவர்களுக்கு எவ்வகைத் தீர்ப்பு வழங்கப்பட்டது என்பதனையும் மக்கள் ஞாபகப்படுத்தி வருகின்றனர்.

அகையால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு உரிய உயரிய தண்டனை வழங்குவதற்கு அதிமேதகு ஜனாதிபதி உத்தரவிடவேண்டும் என நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வாறு அவ்வறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.