சம்மாந்துறை கோரக்கோயில் அகோரமாரியம்மன் ஆலய பாற்குடபவனி!


(காரைதீவு  நிருபர் சகா)

வரலாற்றுப்பிரசித்திபெற்ற  சம்மாந்துறை கோரக்கோயில் அகோரமாரியம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்புச் சடங்கையொட்டிய பாற்குடபவனி  நேற்று 18 ஆம் திகதி  திங்கட்கிழமை காலை  கோலாகலமாக நடைபெற்றது.

வரலாற்றுப் பிரசித்திபெற்ற சம்மாந்துறை பத்திரகாளி அம்பாள் ஆலயத்திலிருந்து பாற்குடபவனி ஆரம்பமானது. ஆலயபூசகர் மு.ஜெகநாதன் முதல்நாள் உபயகாரர் கி.ஜெயசிறில் ஆலயநிருவாகத்தினர் உள்ளிட்டோர் கும்பம் தாங்கிவர நூற்றுக்கணக்கான பெண்பக்தர்கள் பாற்குடம் சுமந்து பிரதான வீதியினூடாக வலம் வந்தனர்.
சுமார் 500மீற்றர் கடந்து அம்மனாலயத்தைச் சென்றடைந்து அங்கு பால் அம்மனுக்குக் சொரியப்பட்டது.

இதேவேளை 25 ஆம் திகதி அம்மன் வெளி வீதியுலா இடம்பெறும்.
09நாட்கள் சடங்குகள் தினமும் நடைபெறும். சடங்குகள் யாவும் தலைமைப்பூசகர் மு.ஜெகநாதன்  தலைமையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

10  ஆம் நாள் அதாவது 27ஆம் திகதி புதன்கிழமை காலை தீமிதிப்பு உற்சவம்  நடைபெறுமென என ஆலய அறங்காவலர்சபைத்தலைவர் ம.பாலசுப்பிரமணியம்  தெரிவித்தார்.

இவ்வாலயத்தின் 9நாள் சடங்குகளையும் கோரக்கோயில் மற்றும் காரைதீவு அன்பர்களே உபயகாரர்களாகநின்று நடாத்துவது குறிப்பிடத்தக்கது.
எட்டாம்நாள் சடங்கு 04.07.2018இல் நடைபெற்று வருடாந்த தீமிதிப்பு சடங்கு நிறைவடையுமென தலைவர் பாலசுப்பிரமணியம் மேலும் தெரிவித்தார்.