களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்



(Photos - Lorans )
மட்டக்களப்பு களுதாவளை பகுதியில் மூர்த்தி,தலம்,தீர்த்தம் என முறையே அமையப் பெற்று தம்மை நாடி வருகின்ற பக்தர்களின் குறை தீர்க்கும் தெய்வமாக வீற்றிருக்கின்ற களுதாவளைப் பிள்ளையார் ஆலயத்தின்  வருடாந்த உற்சவம்  12.06.2018   ஆரம்பமாகியது .
  எதிர்வரும் 21 ம் திகதி காலை தீர்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.

10 தினங்கள் திருவிழா இடம்பெறுவது வழமை.கிராமத்தின் பாரம்பரிய வழக்கத்தின்படி 6 குடும்பங்கள் ஆலயத்திருவிழாவுக்கு கொண்டுள்ளனர்.
1 ஆம்2 ஆம் திருவிழாக்கள் ஆலய நிருவாகத்தின் கீழ் நடத்தப்படுகின்றது 
3 ஆம் நாள் திருவிழாவை வள்ளி நாயகி குடும்பமக்களும்,
4 ஆம் நாள் திருவிழாவை செட்டி குடும்ப மக்களும்,
5 ஆம் நாள் திருவிழாவை போற்றிநாய்ச்சி குடும்ப மக்களாலும்,
 6 ஆம் நாள் திருவிழாவை சுரக்காய் மூர்த்தி குடும்ப மக்களும் 
7 ஆம் நாள் திருவிழாவை பேனாச்சி குடும்ப மக்களும் 
8 ஆம் நாள் திருவிழா பெத்தாக்கிழவி குடும்ப மக்களாலும் நடத்தப்படுகின்றது.
9 ஆம் நாள் திருவிழா அனைத்து குடும்பங்களும் இணைந்து ஆலய நிருவாகத்தினால் இறுதி நாள் திருவிழாவாக கொண்டாடப்படும்.அன்றைய நாளில் அன்னை பிதா உலகம் என்றதத்துவத்தை உலகுக்கு சொன்ன நாரதரின் விளையாட்டால் உண்டான மாம்பழ கதை நாடகம்,மூல மூர்த்திகளை வைத்துக் கொண்டே நடத்தப்படுகின்றது.இந்த நிகழ்வை மாம்பழத் திருவிழா என்று அழைக்கின்றனர்.