களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்

வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.

சுமார் 4000 வருடங்களுக்கு முற்பட்டதாகவும் நாகர்களினால் வழிபடப்பட்டதாகவும் களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயம் மூர்த்தி,தலம்,விருட்சம் ஆகியவற்றினைக்கொண்ட சிறப்புமிக்க ஆலயமாக காணப்படுகின்றது.

ஆலயத்தின் வருந்த உற்சவத்தில் மட்டக்களப்பு மாவட்டம் உட்பட உலகின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கானோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் தினமும் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் சுவாமி வீதியுலா மற்றும் வெளிவீதியுலா என்பன நடைபெற்றுவந்தன.

தாய்,தந்தையின் முக்கியத்துவத்தினை உலகுக்கு எடுத்துக்காட்டிய மாம்பழ திருவிழா நேற்று (புதன்கிழமை) மாலை ஆலயத்தி சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ விநாயகமூர்த்தி குருக்கள் தலைமையில் நடைபெற்ற ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் இன்று காலை விநாயகப்பெருமானுக்கு விசேட அபிசேகம்,பூஜைகள் நடைபெற்று தீர்த்தக்கரைக்கு சுவாமி வீதியுலா வந்தார்.

அங்கு நடைபெற்ற விசேட பூஜைகள் மற்றும் அரப்பு வைக்கும் நிகழ்வினை தொடர்ந்து களுதாவளை தீர்த்தக்கேணியில் தீர்த்தோற்சவம் பல்லாயிரகக்ணக்கான அடியார்கள் புடை சூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இந்த உற்சவத்தின்போது தூக்கு காவடி,பால் காவடிகளை ஏந்தி ஆயிரக்கணக்கான அடியார்கள் தங்களது நேர்கடனை செலுத்தினர்.