பெரிய களப்பு நில ஆக்கிரமிப்பு கைகலப்பு சம்பவம் ! கைது செய்யப்பட்ட இரு பெண் பிரதேசசபை உறுப்பினர்கள் பிணையில் விடுவிப்பு

க- சரவணன்;--

அம்பாரை ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள    களப்பு  நிலத்தை அத்துமீறி வேலியிட சென்ற  ஆக்கிரமிப்பாளர்களை தடுத்து நிறுத்த சென்ற பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆலைடிவேம்பு பிரதேசசபை பெண் உறுப்பின் இருவரையும் நேற்று செவ்வாய்க்கிழமை அ;கரைப்பற்று நீதவான் நீதிமன்றம்  நீதிமன்ற பினையில் விடுவிக்கப்பட்டனர் .

குறித்த பெரியகளப்பு பகுதியில் தமது காணி என முஸ்லீம் நபர் ஒருவர் களப்பு நிலத்தை திங்கட்கிழமை (18) அத்துமீறி வேலி அடைத்து ஆக்கிரமிக்க முற்பட்டபோது மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு நில ஆக்கிரமிப்புக்கு எதிராக எதிர்பு தெரிவித்து  களப்பில் நாட்டப்பட்ட வேலிகளை பிடுங்கி எறிந்தனர் இதனால் அங்குபதற்றம் ஏற்பட்டது

இதனைத் தொடர்ந்து நில ஆக்கிரமிப்பாளர் தனது காணியை எல்லையிட்டு வேலியடைக்க முற்பட்டபோது தம்மை தாக்கியதாக  அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடு;து பொலிசார் நேற்று செவ்வாய்க்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச சபையின் சுதந்திரகட்சி , ஜக்கிதேசிய கட்சிகளைச் சேர்ந்த இரு பெண் உறுப்பினர்களை கைது செய்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்களை நீதவான் பிணையில் பிடுதித்து எதிர்வரும் 3 திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்

இதேவேளை திருக்கோவில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவு 32 சதுர கிலோமீற்றர் கொண்ட பெரிய களப்பு இலங்கையில் 5 வது இடத்தில் உள்ள ஒரு பெரியகளப்பு ஆகும். இக்களப்பில் நன்னீர் மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்டுடு சுமார் 4 ஆயிரம் குடும்பம் வாழ்ந்;துவருகின்றது

இந்த நிலையில்  கடந்த சில ஆண்டுகளாக இந்த களப்பு பகுதி நிலத்ம் தமது நிலம் என  போலி ஆவணங்களுடன் ஆக்கிரமித்துவருகின்றனர். இது தொடர்பாக மீனவர்கள் பொதுமக்கள் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தபோதும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை இதனால் இந்த களப்பு பகுதியை வெளி பிரதேசங்களில் இருந்து போலி ஆவணங்களுடன் வந்து ஆக்கிரமிக் தொடங்கியுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.;

இதனால் இந்த பகுதியல் நில ஆக்கிரமிப்பாளபர்களுக்கும் மீனவர்களுக்கிடையே தொடர்ந்து சில தினங்களாக சர்சசை ஏற்பட்டுவருகின்றது குறிப்பிடத்தக்கது