கிழக்குப் பல்கலையில் சுவாமி விபுலானந்தரின் 22 ஆவது நினைவுப் பேருரை



(சசி)
இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தால் நடாத்தப்பட்ட சுவாமி விபுலானந்தரின் 22  ஆவது நினைவுப் பேருரை நிகழ்வு கிழக்கு பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் சுவாமிகளின் நினைவு தினமான 19.07.2018 காலை 10 மணிக்கு கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசாரத் துறைப் பீடாதிபதி மு.ரவி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

அதிதிகளை வரவேற்றலுடன் சிறப்பாக ஆரம்பமாகிய இந் நிகழ்வில் முதலில் மங்கல விளக்கு ஏற்றுதல் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழ் மொழி வாழ்த்து இசைக்கப்படது, வரவேற்பு உரையை கிழக்கு பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் திருமதி. ரூபி வலன்ரீனா பிரான்சிஸ் நிகழ்த்தினார்.

இந்து நாகரிகத்துறைத் தலைவர் காலாநிதி (திருமதி) எஸ் . கேசவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலின்  கீழ் நடைபெற்ற இந் நினைவுப் பேருரை நிகழ்வில், நினைவுப் பேருரை ஆற்றுபவருக்கான   அறிமுகத்தை தொடர்ந்து  பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை ஓய்வுநிலைப் பேராசிரியர் கலாநிதி துரை. மனோகரன் அவர்கள் சுவாமி அவர்களின் நினைவுப் பேருரையை ஆற்றினார்.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் த. ஜெயசிங்கம், கௌரவ அதிதியாக பல்கலை பிரதி உபவேந்தர் வைத்திய கலாநிதி கே.இ. கருணாகரன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக அனைத்து பீடங்களின் பீடாதிபதிகளும், விரிவுரையாளர்கள், மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கலந்துகொண்ட அனைவருக்கும் சுவாமிகளின் நினைவுப் பேருரை நூல் வழங்கப்பட்டது, அதிதிகளின் உரைகளைத் தொடர்ந்து நுண்கலைத் துறைத் தலைவர் சு.சந்திரகுமார் அவர்களால் நன்றியுரை ஆற்றப்பட்டு நிகழ்வானது இனிது நிறைவடைந்தது.