'கிழக்கு வளாக மரங்களும் கைவினைகளும்' எனும் தொனிப்பொருளில் காட்சிப்படுத்தல்



கோடையின் குடையாக தென்றலின் நடையாக விரிந்து நிற்கும் விருட்சங்கள் என் மேனி சிலிக்க தன் மேனியாட்டி தென்றலிசை மீட்டி பூமிக்கு குடையாய் நீட்டி நிற்கின்ற எங்கள் கிழக்கின் வளாக மரங்கள்.
அழகினை அள்ளி தெளிந்து அரவணைத்து தொடர் வரிசையாய் முலைக்கிறது இம் மரங்கள்.மரத்தில் இருந்து பல பலனைப்
பெற்று கொண்டு கடைசியில் நாம் அதற்கு கொடுக்கும் சன்மானம் என்ன? மரணம் மட்டும் தான் இத்தனை அழகினையும் பயன்களையும் கொடுக்கும் மரத்தினை தொடர்ந்தும் பாதுகாத்து நம் எதிர்கால சந்ததியினரையும் அதன் பால் ஈர்க்க வேண்டும். இதனை மையமாகக் கொண்டு 2018.07.19 திகதியன்று நுண்கலைத்துறையினரால் கலைகலாசாரபீட முன்றத்தில் 'கிழக்கு வளாக மரங்களும் கைவினைகளும்' என்ற தொனிப்பொருளைக் கொண்டு ஓவியங்கள் மற்றும் கைவினைகள் தொடர்பாக காட்சிப்படுத்தல்
நிர்மலவாசன் மற்றும் கமலாசுகி அவர்களின் வழிகாட்டலின் வாயிலாக வைக்கப்பட்டது. 
இந்நிகழ்வுக்கு கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் த.ஜெயசிங்கம் அவர்கள் பிரதம அதிதியாகவும் சிறப்பு அதிதிகளாக பிரதி உப வேந்தர் வைத்தியக் கலாநிதி கே.இ.கருணாகரன் அவர்களும், கலைகலாசார பீட பீடாதிபதி தி.மு.ரவி அவர்களும், விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களும்,பேரவை உறுப்பினர் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களும், கலந்து சிறப்பித்தனர். அத்தோடு தமிழகப் பேராசிரியர் இ.முத்தையா அவர்களும், அவரது துணைவியார் திருமதி.வைத்தியர் விஜயலாக்சுமி அமையாரும்,கலந்து சிறப்பித்தனர். இவர்களின் வருகையானது இனி வரும்
காலங்களிலும் இவ்வாறான நிகழ்ச்சிகளைத் தொடர ஓர் தூண்டு சக்தியாக அமைந்துள்ளது.

அந்தவகையில் கிழக்கு பல்கலைகழக வளாகத்தில் காணப்படும் வளாக மரங்களையும் மற்றும் மட்டக்களப்பு மக்களிடம் காணப்படும் சுயதொழில்களையும் வெளிக்கொணரும் வகையில் இக் கணகாட்சி முன்னெடுக்கப்பட்டது. நுண்லைத்துறை தலைவர் சு.சந்திரகுமார்
வழிகாட்டுதலின் வாயிலாக கிழக்கு பல்கலைகழகத்தில் மூன்றாம் நுண்கலைத்துறை சிறப்பு கற்கைநெறியினை தொடரும் என்னால் இக் கண்காட்சியில் ஒரு பகுதியாக மட்டக்களப்பு மக்களிடம் காணப்படும் கைவினைகள் தொடர்பாக மற்றும் என்னால் ஒரு மாத காலம் உள்ளக
பயிற்சியில் தும்புக் கைத்தொழில் நான் கற்றுக் கொண்ட விடயங்கள் தொடர்பாகவும்  காட்சிப்படுத்தல் அமைந்தது.
நுண்லைத்துறை தலைவர் சு.சந்திரகுமார் வழிகாட்டுதலின் வாயிலாக எனது ஒருமாத கால உள்ளக ஆய்வானது மட்டக்களப்பு கிராமிய தொழிற்துறை திணைக்களத்தின் ஒரு பகுதியான தும்பு நிலையத்தில் பயிற்சினை மேற்கொண்டேன்.இங்கு பல தும்பினால் பல அலங்கார பொருட்களும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களையும் செய்வதற்கும் கற்றுக்
கொள்ளவும் ஓர் வாய்ப்பாக அமைந்தது. இங்கு சுவர் அலங்காரம், கால்துடைப்பான், தும்புத்தடி, சுவருக்கு அடிக்கும் துடைப்பான், வர்ணம் தீட்டும் தூரிகை, அத்துடன் சிரட்டையினால் செய்யப்படும் அலங்கார பொருட்கள், சிப்பி மாலை, என பல பொருட்கள் செய்ய ஓர் வாய்ப்பாக அமைந்தது எனலாம். இம் 30 நாட்களைக் கொண்ட தொடர் பயிற்சி
செயற்பானது எதிர்காலத்தில் தும்பு செயற்பாடுகளில் எனது அறிவையும் திறன்களையும் நுட்பங்களையும ஆற்றல்களையும் வளர்த்துக் கொள்வதற்கு எதிர்காலத்தில் வருமானத்தை ஈட்டித் தரக்கூடியதும் பொருளாதாரத்தை உயர்த்தக் கூடியதுமான கலைத்துவம் பொருந்திய தொழிலாகவும் தும்புக் கைத்தொழில் அமையப்பெற்றுள்ளது. நுண்லைத்துறை தலைவர் சு.சந்திரகுமார் வழிகாட்டுதலின் வாயிலாக இக் காட்சிப்படுத்தல்
'கிழக்கு வளாக மரங்களும் கைவினைகளும்' என்கின்ற போது கிழக்கின் மரங்களினால் கிடக்கக் கூடிய சிறுதும்பினைக் கூட பயன்படுத்தி மக்களுக்கு தேவையான பொருட்களை செய்யும் நுட்பங்களையும் இதில் ஊடாக அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தியது.
இன்று ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு கைத்தொழிலாவது கற்றிருப்பது அவசியம். இவ்வாறு இருப்பதால் ஒவ்வொரு வருடம் பல்கலைக்கழகம் முடித்து வேலைவாய்ப்பற்று இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை சுயதொழில் அடிப்படையில தங்களது
வாழ்வாதாரங்களை மேம்படுத்திக் கொள்ள முடியும். மட்டக்களப்பு பல்வேறு உள்ள10ர் கைத்தொழில் பல விடயங்கள் இன்று புத்துயிர் பெற்று
வருகின்றன ஆனால் அதனை வெளிக் கொண்டு வருவதற்கு இவ்வாறான காட்சிப்படுத்தல் ஊடாக அறியக் கூடிய வாய்ப்பு எம்மத்தியில் காணப்படுகின்றது.