கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் சீனா பயணம்


கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலக மாகாணப் பணிப்பாளரும் இலங்கைத் திட்டமிடல் சேவையின் சிரேஸ்ட அதிகாரியுமான இரா.நெடுஞ்செழியன் சீன அரசாங்கத்தின் அழைப்பிற்கிணங்க திட்டங்களை அடையாளம் காணல் மற்றும் திட்டமிடல் திட்ட அமுலாக்கம், முகாமைத்துவம் தொடர்பான மூன்று வார கால பயிற்சிக்காக சீனா செல்கிறார்.

இரா.நெடுஞ்செழியன் இம்மாதம் 20ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி வரை சீனாவில் தங்கியிருந்து இப் பயிற்சியில் கலந்து கொள்வார் எனத் தெரிய வருகிறது.

மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றி வந்த இலங்கைத் திட்டமிடல் சேவையின் சிரேஸ்ட அதிகாரியான இரா.நெடுஞ்செழியன் மிக அண்மையில் இடமாற்றப்பட்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலக மாகாணப் பணிப்பாளராக நியமனம் பெற்றவர்.