வாகன சாரதிகளுக்கான எச்சரிக்கை !! இன்று முதல் குற்றங்களுக்கு சம்பவ இடத்திலேயே அபராதம் !


வாகன வீதி ஒழுங்கு குற்றங்களுக்காக சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமுலுக்கு வருகிறது.

இதன்படி அதிக வேகமாக வாகனத்தை செலுத்துகின்றவர்களுக்கு விதிக்கப்படும் 1000 ரூபாய் அபராதம் இன்று முதல் 3000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பல போக்குவரத்து சங்கங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய அபராத தொகையானது, 30 முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்கப்படவுள்ளது. அதன் பிரகாரம் அதிகரிக்கப்படும் புதிய அபராத தொகையில் முக்கியமானவை வருமாறு,
  1. அதிக வேகத்தில் செல்லல் – 3000 ரூபாய்.
  2. போக்குவரத்து விதிகளை மீறல் – 2000 ரூபாய்
  3. பொலிஸ் கட்டளைகளை புறக்கணித்து பயணித்தல் – 2000 ரூபாய்
  4. பாதையில் இடையூறாக பாதுகாப்பற்ற முறையில் வாகனங்களை நிறுத்துதல் – 2000 ரூபாய்
  5. ஆலோசனை உரிமப் பத்திரம் இல்லாமல் ஆலோசகராக ஈடுபடல்– 2000 ரூபாய்
  6. வருவாய் உரிமங்களைக் காண்பிக்க தவறுதல் – 1000 ரூபாய்
  7. வாகனத்தில் அதிக ஒலி எழுப்புதல் – 1000 ரூபாய்
  8. வாகனத்தினை பாதையில் நிறுத்துதல் – 1000 ரூபாய்
  9. பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமை – 1000 ரூபாய்
  10. வாகனப் பட்டி (சீட் பெல்ட்) இடாமை –1000 ரூபாய்
  11. பொருத்தமற்ற ஒலிகளை எழுப்புதல் – 1000 ரூபாய் என 33 குற்றங்களுக்கான கட்டனங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.