கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியின் அதிபர் தரம் ஒன்று அதிபராக தரமுயர்த்தப்பட்டார்


க. விஜயரெத்தினம் 
கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியின் முதல்வர் திருமதி. திலகவதி ஹரிதாஸ் அவர்கள் இலங்கை அதிபர் சேவையின் தரம் ஒன்றுக்கான(1)அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.23.11.2015 திகதி முதல் தரம் ஒன்றுக்கான அதிபராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.இவருக்கான இலங்கை அதிபர்சேவை தரம் 1க்குகான நியமனம் வழங்கும் நிகழ்வு கல்வி அமைச்சில் அண்மையில் நடைபெற்றது.கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்கள் அண்மையில் இவருக்கான நியமனத்தை வழங்கி வைத்தார்.

21.2.1978ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்று வாகரை மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றி அதன்பின்பு வந்தாறுமூலை,ஏறாவூர்,காத்தான்குடி ஆகிய இடங்களில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றினார்.அதன்பின்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையில் சுமார் 25 வருடம் கடமையாற்றினார்.
அதன்பின்பு புனித மிக்கல் கல்லூரி,வின்சன்ட் உயர்தர பெண்கள் பாடசாலைகளில்  திலகவதி ஹரிதாஸ் அவர்கள்  பிரதி அதிபராகவும்,பகுதித்தலைவராகவும் கடமையாற்றியதோடு மட்டக்களப்பு வலய அதிபர் நலன்புரிச்சங்கத்தின் உபதலைவராகவும் இருந்து காத்திரமான கல்விப்பணியை முன்னெடுத்தவர்.அதுமட்டுமல்லாமல்  1.4.2011 ஆம் திகதி முதல் கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியில் அதிபராக நியமிக்கப்பட்டும்,அதிபராகவிருந்து கல்லூரியின் கல்வி வளர்ச்சிக்கும்,இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் பாரியதொரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் என்பது மிகையாகாது.
கல்லடி விவேகானந்தா கல்லூரியில் அதிபராகவிருந்து வறுமைப்பட்ட மாணவர்களுக்கும் அயராது அர்ப்பணிப்பான சேவை செய்து பல மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கும்,கல்வியக்கல்லூரிகளுக்கும் சென்றது இவருடைய காலத்தில்தான் என்பது உண்மையாகும்.