கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா



(க. விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா  திங்கட்கிழமை (9.7.2018) திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் கல்லூரியின் முதல்வர் திருமதி. திலகவதி ஹரிதாஸ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

மாணவர்களுக்கு நல்ல தலைமைத்துவத்துடனும், வழிகாட்டல்களுடனும் கல்வி எனும் விளக்கேற்றி வைத்தால் விளக்கேற்றி வைப்பவரின் பரம்பரையை இறைவன் காப்பாற்றுவான் என்பது உண்மையாகும். அதற்குரிய அத்தனை அம்சங்களும் இக்கல்லூரியின் அதிபருக்கே பங்குண்டு.

இக்கல்லூரியின் பரிசளிப்பு விழாவானது அதிபர் திருமதி. திலகவதி ஹரிதாஸ் அவர்களின் சிறப்பானதும், தூரநோக்குடைய திட்டமிடல்களுடனும் பல்வேறு எண்ணங்களுடன் சபையோரை கைதட்டி, கரகோசம் செலுத்தும் வகையில் நடைபெற்றது. முதலில் அதிதிகளை மாலை அணிவித்து மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

கல்லடி இராமகிருஸ்ண மிஷன் சுவாமி ஸ்ரீமத் பிரபு பிரேமானந்தாஜீ அவர்களின் ஆசிச் செய்தியுடன் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல், அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசனும், மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்(அமல்), மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் ஆகியோர்கள் சிறப்பு அதிதிகளாகவும்,

கௌரவ அதிதிகளாக மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் கே.அருட்பிரகாசம், கொழும்பு வைத்தியசாலையின் வைத்தியர் திருமதி. அபிராமி ரங்கநாதன், மட்டக்களப்பு வலயக்கல்வி பணிமனையின் உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் வீ. லவக்குமார், மற்றும் திரு.என்.ஹரிதாஸ், மாநகரசபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீகந்தராசா,

பிரதியதிபர்களான வீ.அமிர்தலிங்கம், திருமதி.பிரபாகரி இராஜகோபாலசிங்கம், திருமதி.பவளசாந்தி பிறேமகுமார், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எம்.மங்களேஸ்வரன், முன்னாள் கல்வி அதிகாரி எஸ்.சிவலிங்கம், முன்னாள் மக்கள் வங்கி முகாமையாளர் ஜீ.பாஸ்கரன், ஆசிரியர்களான திருமதி.நித்தியகலா சிவநாதன், திருமதி.சுசாந்தினி சிவநாதன்,

திரு.ஜீ.ரவிச்சந்திரன், எஸ்.ரஞ்சித்நிமால், திருமதி.தயா யோகராசா, திருமதி.சுகந்தி சுதர்சனன், திருமதி.கிரிசாந்தி நிமலன், திருமதி.டிலாணி ராஜ்குமார், திருமதி வசந்தா குமாரசாமி,  திருமதி.அ.சர்வேஸ்வரன், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.மங்கல விளக்கேற்றல் இவரவேற்புரை, தலைமையுரை, அதிதிகள் உரை, கௌரவிப்புக்கள், பரிசுவழங்கள் என்பன இடம்பெற்றது.

இந்த பரிசளிப்பு விழாவில் விஷேட அம்சமாக கல்லூரியின் முதல்வர் திருமதி. திலகவதி ஹரிதாஸ் அவர்கள் இம்மாதம் 24 ம்திகதி அரசசேவையை 40 வருடம் பூர்த்தி செய்து ஓய்வுபெறுகின்றார். இவரை கல்லூரியின் நலன்புரிச் சங்கம் மற்றும், பிரதியதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசார ஊழியர்கள் ஒன்று சேந்து அர்ப்பணிப்பான சேவையை பாராட்டியும், பொன்னாடை போர்த்தியும், கௌரவித்தார்கள்.

இக்கல்லூரியில் கல்விரீதியான, இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் பங்குபற்றி பாடசாலைக்கும், பெற்றோர்களுக்கும் புகழைத் தேடிக்கொடுத்த 364 மாணவர்களுக்கு இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டு சான்றீதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.