புதுக்குடியிருப்பில் மாணிக்கவாசகர் குருபூசை


விஞ்ஞானமே வியக்கும் மெய்ஞானத்தை அருளியவர் மாணிக்கவாசக சுவாமிகள் இன்றைய விஞ்ஞானம் பூமி உருண்டை வடிவானது என்பதைச் சொல்வதற்க்கு முன்பு மாணிக்கவாச சுவாமிகள் தாம் அருளிய திருவாசகத்தின் திரு அண்டப்பகுதியில் ஒரு கருத்தைச் சொல்லுகின்றார். அக்கருத்து இன்றைய விஞ்ஞானத்தோடு ஒத்துப்போகின்றது. இந்து சமயத்தின் பெருமையை உலகறியச் செய்தவர் மாணிக்கவாக சுவாமிகள் என இந்துப்பிரசாரகர் அகரம் செ.துஜியந்தன் தெரிவித்தார்.

மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு அம்மன் அறநெறிப்பாடசாலையில் மாணிக்கவாசகர் சுவாமிகள் குருபூசை தினம் அறநெறி அதிபர் தி.நாகநாதன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் தேவார இசைக்கலைமாணி வி.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இங்கு அறநெறி மாணவர்களால் திருவாசம் முற்றோதல் நிகழ்த்தப்பட்டது. 

அங்கு தொடர்ந்து பேசிய இந்துப்பிரசாரகர் அகரம் செ.துஜியந்தன்...
திருவாசகத்திற்கு உருகாதோர் ஒரு வாசகத்திற்க்கும் உருகமாட்டார்கள். அருமையான மணிமணியான வார்த்தைகளால் மாணிக்கவாசகர் திருவாசகத்தை இயற்றியுள்ளார். திருவாசகத்தில் திரு அண்டப்பகுதியில் வரும் அண்டப்பகுதியின் உண்டைப்பிறக்கும் அளப்பெரும் தன்மை வளப்பெரும் காட்சி எனும் பதிகத்தில் இந்தப் பிரபஞ்சம் உருண்டையாகத்தான் பிறந்துள்ளது. 

அதிலே நூற்றியொரு கோடிக்கும் அதிகமான கிரகங்களும், விண்மீன்களும், பூமிகளும், சூரியன்களும், சந்திரன்களும் நிறைந்து கிடக்கின்றன.
சூரியனின் துல்லியமான அணுக்கதிர்கள் தாக்குவதால் ஒளியற்ற கிரகங்கள் கூட சிறியதாக மின்னுகின்றன. அன்று மாணிக்கவாசகர் எந்த தொலைநோக்கு கருவியைக் கொண்டு அதனைப்பார்தார். ராடரின் உபயோகம் அறியப்படும் முன்னரே மாணிக்கவாசகரால் தெரிவிக்கப்பட்ட செய்தியாக அது இருந்தது. பூமி உட்பட எல்லாக்கிரகங்களும் உருண்டை என்று மாணிக்கவாசகர் எப்போதோ சொல்லிவிட்டார். 

அது ஒன்றை ஆதாரமாகக் கொண்டு ஈர்ப்பு விசைத்தன்மையை சுட்டிக்காட்டுகின்றது. அதுமட்டுமா நூறு கோடிக்குமேலே விண்வெளியில் கோள்கள் சிதறிக்கிடக்கின்றன என்று சொல்லி எத்தனை நூற்றாண்டுகளுக்குப்பின் அது உண்மை என்பதை இன்றைய விஞ்ஞானம் சொல்கின்றது. மாணிக்கவாசகரின் திருவாசகம் வெள்ளைக்காரர்களையும் ஆச்சரியப்பட வைத்ததோடு பலரை இந்து சமயத்தின் பால் ஈர்த்தெடுத்தது என்றால் நாம் அதனை பொருள் உணர்ந்து பாடவேண்டும் என்றார்.