பட்டிப்பளை பிரதேச சுகாதாரப்பிரில் டெங்கு பரிசோதனைகள் முன்னெடுப்பு


(வரதன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவிவரும் டெங்கு நோய் கட்டுப்படுத்தும் டெங்கு ஒழிப்புத்வேலைதிட்டம் இன்று பட்டிப்பளை பிரதேச சுகாதாரப்பிரில் இடம்பெற்றுது. அபாயமுள்ள மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இனம் காணப்பட்டுள்ளதால் இந்நோயினை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளை கிழக்கு மாகணசுகாதார சேவைகள் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப்பகுதியில் பட்டிப்பளை பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி திருமதி கலையரசி துரைராஜசிங்கம் தலைமையில் டெங்கு பரிசோதனைகள் 10 குழுக்களாக பிரிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டன.

கொக்கட்டிக்சோலை ஆலயப்பகுதியில் டெங்கு நோய் இனங்காணப்பட்ட பகுதிகளில் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் சோதனைகள் முன்னெக்கப்பட்டன. டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களான பொது கிணறுகள் வெற்றுக்காணிகள் நீர்த்தாங்கிகள் மற்றும் முன்பள்ளிகூடங்கள் இல்லங்கள் பாடசாலைகள் என்பன பட்டிப்பளை தலைமை பொதுச்சுகாதார பரிசோதகர் எ.கே திசவீரசிங்கம் வழிநடத்தலின் கீழ் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது. இதில் 100 க்கணக்கான வீடுகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உயர் அதிகாரிகள் பட்டிப்பளை பிரதேச செயலக மற்றும் பிரதேசசபை ஊழியர்கள் இவ்டெங்குப் பரிசோதனை நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். டெங்கு நோய் நுளம்பு பரவக்கூடிய இடங்கள் இனங்காணப்பட்டு வீட்டு உரிமையாளர்கள் அதனை உடனடியாகத் துப்பரவு செய்வதற்கு பணிப்புரைகள் வழங்கப்பட்டன. இதேவேளை மூன்று வீடுகளில் டெங்கு பரவக்கூடிய அடையாளங்கள் காணப்பட்டன. இந்தப் பரிசோதனையின் போது மூடியுள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதென  பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்தார்.