கிழக்கு மாகாணத்திலிருந்து மருத்துவம், பொறியியல், சட்டம் ஆகிய துறைகளுக்கு பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப் பரிசில் திட்டம் - 2018


(கல்லடியூர் ஆனந்த்)

கிழக்கு மாகாணத்திலிருந்து பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்படும் உதவி தேவைப்படும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் கடந்த 2012 ஆண்டு தொடக்கம் சங்காரவேல் அமைப்பின் ஏற்பாட்டில் நடைமுறைப் படுத்தப்பட்டுக் கொண்டு வருகின்றது. இதுவரை இப்புமைப் பரிசில் திட்டத்தில் 54 மாணவர்கள் உள்வாங்கப்பட்டு அவர்களுக்கான புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் வெருகல் ஈச்சிலம்பற்று கல்வி மேம்பாட்டுச்சபையினாலும், செட்டிபாளையம் சிவன் இல்லத்தினாலும்; நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இப்புலமைப் பரிசில் திட்டத்தில் மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற
துறைகளுக்குத் தெரிவு செய்யப்படும்; மாணவர்களை உள்வாங்கப் படுகின்றார்கள்.

இப்புலமைப் பரிசில் திட்டத்திற்கு நன்கொடையாளர்களாக இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வசித்து வரும் சிவகாமி பவுண்டேசன் அமைப்பின் ஸ்த்தாபகர் திரு/திருமதி பரமேஸ்வரன், ரெயின்வோ பவுண்டேசன் அமைப்பின் ஸ்த்தாபகர் திரு/திருமதி நிர்மலன், டாக்டர்/திருமதி இராஜசுந்தரம், சிறிசக்தி பவுண்டேசன் அமைப்பின் டாக்டர்/திருமதி சிறிஸ்கந்தராஜா, திரு/திருமதி சுரேஸ், சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பின் ஸ்த்தாபகர் திரு/திருமதி சுகுமார் ஆகியோர் நிதியுதவி அளித்துக் கொண்டு வருகின்றார்கள்.

புலமைப் பரிசில் கொடுப்பனவாக மருத்துவத் துறைக்கு மாதாந்தம் 8000.00 ரூபாவும், பொறியியல், சட்டம் ஆகிய துறைகளுக்கு மாதாந்தம் 7000.00 கொடுபடுகின்றது. இத்தொகையானது அவர்களது கல்வி முடியும் வரை நடைமுறைப்படுத்தப்படுவதை நன்கொடையாளர்கள் உறுதி செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச்செயற்பாட்டிற்கு இணைப்பாளர்களாக சங்காரவேல் அமைப்பினர் செயற்படுகின்றனர்.

இவ்வருடத்திற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் எதிர்வரும் 20.10.2018 ஆந் திகதிக்கு முன்பாக கீழ் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். மட்டுப்படுத்தப்பட்ட அளவு புலமைப்பரிவில்களே வழங்கப்படுவதனால் பொருளாதார உதவி அதிகம் தேவைப்படுபவர்கள் முன்னுரிமைப்படுத்தப்படுவார்கள்.


(சமுர்த்தி உதவி பெறும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்)
(2017 A/L  பரீட்சைக்குத் தோற்றியவர்கள மாத்திரமே விணணப்பிக்க முடியும. விண்ணப்ப இறுதித்திகதி (20.10.2018;)

விண்ணப்பங்களைப் பெற விரும்புவோர் சுய விலாசமிடப்பட்ட முத்திரையொட்டப்பட்ட தபாலுறையை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.  அல்லது  sspananth@gmail.com  எனும் மின் அஞ்சல் முகவரிக்கு தங்களது விபரங்களை அனுப்பிப் பெற்றுக் கொள்ள முடியும். 

form download https://drive.google.com/open?id=0B-4cDdkTaMs-SjBVaU95Tk8zYnZTQ1F3R2dqcDhldi1laU00

விண்ணப்பங்களை கீழ் காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்
திரு. சோ. சிவலிங்கம்,
தலைவர்,
சங்காரவேல் பவுண்டேசன,
 (ஓய்வுநிலை விஞ்ஞான உதவிக் கல்விப பணிப்பாளர்),
இல. 186, புதிய கல்முனை வீதி,
கலலடி, மட்டக்களப்பு

தொடர்புகளுக்கு 0652222861 / 0777033014 / 0778537827