மாமாங்கப் பிள்ளையார் ஆலய தேர் வெள்ளோட்ட நூல் வெளியீடும்; அறநெறிப் பாடசாலை பரிசளிப்பு நிகழ்வும்

மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தில் திராவிட மரபு முகபத்திர மாக இரத வெள்ளோட்ட சிறப்பு மலர் வெளியீடும், அறநெறிப் பாடசாலை பரிசளிப்பு நிகழ்வும் வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு ஆலய முன்றலில் நடைபெற்றது .

ம.சுந்தரலிங்கம் அவர்களால் எழுதப்பட்ட நூலானது ஏழூர் குருகுல வம்ச மக்களின் திருவிழா தினத்தில் திரு .விக்கிரமன் தலைமையில் வெளியீட்டு விழா கண்டது.

இந் நிகழ்வில் ஆசியுரையினை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் சுவாமிஜி அவர்கள் ஆற்றியதுடன், அதிதிகளாக ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ஆதி சௌந்தரராஜக் குருக்கள், காமராஜர் பல்கலைக்கழக உப வேந்தர் டாக்டர் ஓ.கே. குணநாதன் ஆகியோரும், ஆலய வண்ணக்குமார், அறநெறிப் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.

இதன் பிரதான அம்சமாக தேரினை வடிவமைத்த ஸ்தபதி செல்லையா பாலச்சந்திரன் அவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், வெள்ளோட்ட சிறப்பிதழ் நூல் பிரதிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது, மேலும் அறநெறி ஆசிரியர்களுக்கு பரிசுப் பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

(படங்கள் - புவி )