கிண்ணியா பிரதான வீதியின் அருகே தங்கம் தேடி பொதுமக்கள் ! சிறிய அளவான தங்கங்கள் கிடைப்பு !


(கதிரவன் )
தம்பலகாமம் கிண்ணியா வீதியில் காளிபாஞ்சான் என்னும் இடத்தில் தங்கம் தேடி பொதுமக்கள் குழுமியுள்ளன. வீதியின் ஓரத்தில் காலை தங்கம் கிடைத்ததாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அவர்கள் சேரத் தொடங்கினர். சிலர் தங்கத்தை பெற்றுக் கொண்டடும் உள்ளனர்.

சிறிய அளவில் இது காணப்பட்டுள்ளது. கண் போன்ற இலட்சனை அதில் குறிக்கப்பட்டுள்ளது. பெற்றுக் கொண்டவர்கள் அவ்விடத்தில் இருந்து அகன்று சென்றுள்ளதாக அங்கு கூடியிருந்தவர்கள் தெரிவத்தனர். மாலை அங்கு வந்த கிண்ணியா பொலிசார் கூடியிருந்தவர்களை கலைந்து செல்லுமாறு பணித்தனர்.