கிழக்கு மாகாண இளம் கண்டுபிடிப்பபாளர் தொழில்நுட்பக் கண்காட்சி


(க. விஜயரெத்தினம்)

கிழக்கு மாகாண இளம் கண்டுபிடிப்பபாளர்களின் புதிய படைப்புக்களை உள்ளடக்கிய மாபெரும் தொழில்நுட்பக் கண்காட்சி புதன்கிழமை (15.8.2018) முற்பகல் மட்டக்களப்பு ஆரையம்பதி கோவில்குளம் உயர்தொழில் நுட்ப நிறுவகத்தில் இராணுவத்தின் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்துசித்த பனன்வலவின் பிரதம பங்குபற்றலுடன் ஆரம்பமானது.

மட்டக்களப்பு உயர்தொழில் நுட்பக்கல்வி நிறுவகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் மற்றும் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகம் இணைந்து நடாத்தும் கிழக்கு மாகாண இளம் கண்டுபிடிப்பபாளர்களின் புதிய படைப்புக்களை உள்ளடக்கிய மாபெரும் தொழில்நுட்பக் கண்காட்சியில் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாரை மாவட்டங்களிலுள்ள உயர்தொழில் நுட்டக் கல்வி நிறுவகத்தின் மாணவர்களின் படைப்புக்கள், மட்டக்களப்பு பாடசாலைகளின் மாவட்ட மணவர்களின் புதிய கண்டுபிடிப்புக்கள் மற்றும் இராணவத்தினரின் படைப்புக்கள் என்பன காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.

முக்கியமாக Internet of Things (IOT) , Auto Mobile and Electrical , Web application, Mobile application and Desktop Application, Robotics , போன்ற பிரிவுகளில் கண்டுப்பிடிப்பாளர்களின் படைப்புக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இளம் தலைமுறையினரின் தொழில்நுட்வியல் கண்டுபிடிப்புக்களுக்கான களத்தினை அமைத்துக்கொடுக்கும் நோக்குடன் கிழக்கு மாகாணத்தில் முதன் முறையாக மட்டக்களப்பு உயர்தொழில் நுட்பக்கல்வி நிறுவகத்தினால் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு உயர்தொழில் நுட்பக்கல்லூரியின் பணிப்பாளர் செல்வரெத்தினம் ஜெயபாலன் தலைமையில் இதன் ஆரம்ப நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் ஏ.நவேஸ்வரன், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. சத்தியானந்தி நவசிவாயம், இலங்கை உயர் தொழில் நுடபவியல் நிறுவனத்தின் நிதி மற்றும்,நிருவாக பிரதிப் பணிப்பாளர் நாயகம் என்.எம்.கே.கே.நவரத்தின,மேஜர் ஜெனரல் எம்.முதன்நாயக்கே, 23ஆவது படைப்பிரிவு கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே, 22ஆவது படைப்பிரிவு கட்டளை அதிகாரி சூல அபே நாயக்க, 231ஆவது படைப்பிரிவு கட்டளை அதிகாரி பிரிகேடியர் செனரத் நிவுன்ஹெல்ல ஆகியோரும் அதிதிகளாகக்கலந்து கொண்டனர். இதன்போது 200 மேற்பட்ட கண்காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.