கொடுவாமடு கிராமத்துக்கு குடிநீர் வசதி வழங்க நிதி ஒதுக்கீடு


(மயூ.ஆமலை)
ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள கொடுவாமடு கிராம மக்களின் குடிநீர் பிரச்சினையினை தீர்பதற்கான பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் அவர்களின்  முயற்சியின் பயனாக நிதி அமைச்சு 05 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளது.

நீண்ட காலமாக குடிநீரின்றி அவதியுறும் பதுளை வீதி மக்களின் பிரச்சனையினை தீர்ப்பதற்கு எதுவாக பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் அவர்களின்  ஆலோசனையின்படி, கொம்மாதுறை பிரதான வீதியிலுள்ள பிரதான விநியோக குழாயிலிருந்து தீவு பிரதேசம் வரை கடந்த வருடம் விநியோக குழாய் பதிக்கப்பட்டு தீவு பகுதி மக்களுக்கு குடி நீர் வழங்கப் பட்டு வருகிறது. கொம்மாதுறை தீவு பகுதிவரையுள்ள விநியோக குழாயினை பதுளை வீதிவரை நீடித்து பதுளை வீதியின் கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமாக கொடுவாமடு கிராமத்துக்கு குடிநீர் வழங்க ரூபா.05 மில்லியன் நிதி அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிதி தற்போது மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் விரைவில் நீர்வழங்கள் வடிகாலமைப்பு அதிகார சபையின் மூலம் வேலைகள் ஆரம்பமாகும் எனவும் தெரிவித்தார்.
அண்மையில் கொடுவாமடு பத்திரகாளி அம்மன் கோயில் இறுவட்டு வெளியீட்டு நிகழ்வில், இத்  தகவலை தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் அவர்கள், தாம் வெறுமனே வாய் பேச்சோடு நின்று விடாமல் மாவட்டத்துக்கு விஜயம் செய்யும் அமைச்சர்களிடமும் கொழும்பில் அவர்களுக்கு அலுவலகங்களுக்கும் சென்றும், எமது மக்களது பிரச்சனைகள் தொடர்பாகவும் அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரிவித்தார் .