போதைப்பொருள் தடுப்பு தெரு நாடகம்

(படுவான்.எஸ்.நவா)
போரதீவுப்பற்று பிரதேச செயலகமும் சமுர்த்தி பிரிவும் இணைந்து நடாத்தப்பட்ட போதைப்பொருள் தடுப்பு தொடர்பான தெரு நாடகம் பலாச்சோலை கருணாமலை பிள்ளையார் ஆலய முன்றலில் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் திரு.எஸ்.புவனேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வானது பிரதேசத்தின் போதைப்பொருள் பாவிப்பவர்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு தெரு நாடகத்தினை கிராமம் கிராமமாக நடாத்திக்கொண்டு வருகின்றனர்.

இவ் நாடகத்தின் கருப்பொருள் ஒரு குடிபாவனையும் இல்லாத ஒரு குடும்பம் வாழ்ந்து வந்த வேளையில் குடும்ப தலைவன் அன்றாடம் கூலி வேலை செய்து கொண்டு குடும்பத்தை மேம்படுத்திக்கொண்டு வந்தபோது அவருடைய வலி தாங்கிக் கொள்ள முடியாமல் மர நிழலில் அமர்ந்து கொண்டிருந்த வேளையில் இரண்டு இளம் இளைஞர்கள் அவரை சந்தித்து கலந்துரையாடிபோது வலிக்குரிய சிறந்த மருந்தாக நாட்டு வைத்திய மருந்து உள்ளது. அதனை தொடர்ந்த காலை மாலை சாப்பாட்டிற்கு முன்பும் பின்பும் மெதுமெதுவாக குடித்து வந்தால் தங்களுடைய வலி தீர்ந்து போய் விடும் என அவ் இளைஞர்கள் கூறியதைத் தொடர்ந்து தன்னுடைய மகனை தினமும் சாராயம் வாங்குவதற்காக அனுப்பி மகனும்; தொட்டு ருசித்துப் பார்த்து குடிப்பழக்கத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அவருடைய குடும்பம் மிகவும் சீரழிக்கப்பட்டு இறுதியாக மனைவி கூலிவேலைக்கு ஆளாக்கப்பட்டு சென்றதனால் மகள் தனியாக வீட்டில் இருந்ததைக் கண்ட இளைஞர்கள் அந்தப் பிள்ளையை துஷ்பிரயோத்துக்கு உள்ளாக்கப்பட்டு இறுதியாக அந்த பிள்ளை உயிரிழந்து காணப்பட்டநிலை மிகவும் சோகத்துக்குள்ளாக்கப்பட்டது. இதனால் இந்தக் குடும்பம் சீரழிக்கப்பட்டதைக் கண்டு சமூகம் திருந்தி வாழ வேண்டும் என்பதற்கான இந்த தெரு நாடகம் அமைந்திருந்தது.

இந்நிகழ்வின் போது இப்பிரதேசத்தின் உதவிப் பிரதேச செயலாளர் திரு.எஸ்.புவனேந்திரன் சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் கே.உதயகுமார் தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜீவகுமார் சமூக அபிவிருத்தி மன்ற உத்தியோகத்தர் எஸ்.குபேந்திரராஜா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆலய பரிபாலன சபை தலைவர் உட்பட 500க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.