அற்புதங்கள் நிறைந்த ஆதி பராசக்தி அன்னை ஆரையூர் ஸ்ரீ பேச்சியம்மனின் சடங்கு உற்சவப் பெருவிழா


ஆரையம்பதியில் கோயில் கொண்டு ஆடிவெள்ளி தேடிவந்து அடியவர்களுக்கு வேண்டும் வரமளித்து அடியவர்கள் குறை தீர்த்துக் காத்தருளும் அற்புதங்கள் நிறைந்த ஆதி பராசக்தி அன்னையாம் “பேசும் தெய்வம்” அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மனின் வருடாந்த சடங்கு உற்சவமானது கடந்த 28.07.2018ம் திகதி சனிக்கிழமை பிரம்ம முகூர்த்தத்தில் திருக்கதவு திறக்கப்பட்டு, ஆடிவெள்ளி 03.08.2018ம் திகதி வெள்ளிக்கிழமை உற்சவங்களின் சிறப்பு நாளாகிய அம்பாளின் பக்திமிகு தீமிப்பு வைபவமும் மிகச் சிறப்புற இடம்பெற்று,

அதனைத்தொடர்ந்து 04.08.2018ம் திகதி பள்ளையச் சடங்கும், சமுத்திர தீர்த்தமும் இடம்பெற்று ஆலய உற்சவங்கள் அனைத்தும் இனிதே நிறைவு பெற்றது.

தொடர்ச்சியாக 05.08.2018ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரணிய முகூர்த்தத்தில் அம்மனின் திருக்கதவு அடைத்தலும், வைரவர் பூசையும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ் விசேட பூசைகளானது ஆலய கௌரவ பிரதம பூசகர் : பத்ததி வல்லுனர், பூசகர் சிரோன்மணி, சக்தி ஸ்ரீ. பூ. மகேந்திரராஜா அவர்கள் மற்றும் உதவிப்பூசகர்கள் சக்தி ஸ்ரீ. ம. முரளிதரன், சக்தி ஸ்ரீ. பா. அருணன் ஆகியோரால் திறம்பட நடாத்தி வைக்கப்பட்டது.