எச்சரிக்கை!! வானிலையில் திடீர் மாற்றம்..!


இன்றைய தினம் நாட்டின் சில பிரதேசங்களில் கடும் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் தென்மேற்கு பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் சப்ரகமுவ , மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் விட்டு விட்டு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடமேல் மாகாணத்தின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சுமார் 75 மில்லி மீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும்.

அதேபோல் , மத்திய மலைநாட்டிலும் , தென் மாகாணம் மற்றும் மாத்தளை மாவட்டத்திலும் சுமார் 50 கிலோ மீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும்.

இதேவேளை , புத்தளம் தொடக்கம் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரை மற்றும் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 60 கிலோ மீற்றர ்வரை அதிகரித்து வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் குறித்த கடற்பிரதேசங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.

மற்றைய கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்க கூடும் எனவும் குறித்த கடற்பிரதேசங்களில் கடல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் எனவும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.