பெரியநீலாவணை ஸ்ரீ மஹாவிஸ்ணு ஆலய வருடாந்த மஹோற்சவம்

(செ.துஜியந்தன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கு எல்லைக்கிராமமான பெரியநீலாவணை கிராமத்தில் இற்றைக்கு 500 வருடங்களுக்கு முற்பட்ட ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 14 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

தொடர்ந்து பத்து தினங்கள் நடைபெறும் உற்சவத்தில் எதிர்வரும் 24 ஆம் திகதி சமூத்திர தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது. இதன் விசேட பூசைகளாவன  17 வெள்ளிக்கிழமை பால்பானை எடுத்தல், கம்சன் ஏடு திறத்தல், 18 ஆம் திகதி புஸ்பாஞ்சலி உற்சவம், 19 ஆம் திகதி வேதபாராயண உற்சவம், 20 ஆம் திகதி கற்பூர ஜோதி உற்சவம், 21 ஆம் திகதி உறியடி உற்சவம், 22 ஆம் திகதி திருவேட்டை உற்சவம், 23 ஆம் திகதி முத்துச்சப்பற உற்சவம், ஆகியன நடைபெற்று 24 ஆம் திகதி காலை 9 மணிக்கு தீர்த்தோற்சவம், மாலை 6 மணிக்குதிருப்பொன்னூஞ்சல், மாலை 7 மணிக்கு திருக்கொடி இறக்கம் இடம்பெறும்.

25 ஆம் திகதி மாலை 6 மணிக்கு திருக்கல்யாண, பூங்காவன உற்சவம், 26 ஆம் திகதி மாலை ஆஞ்சநேய, வைரவர் உற்சவம் ஆகியன இடம்பெறவுள்ளது.
உற்சவ காலங்களில் தினமும் காலை 9 மணிக்கு புண்ணியாகவாசனம், 10.30 மணிக்கு மூலஸ்தான பூசை, 11.30 மணிக்கு வசந்தமண்டப பூசை இடம்பெறவுள்ளது. இதேபோல் தினமும் மாலை 5 மணிக்கு மூலஸ்தானபூசை, 6 மணிக்கு ஸ்தம்பபூசை 8 மணிக்கு வசந்தமண்டப பூசை அகியன இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.