நரிப்புல்தோட்டத்தில் வறிய குடும்பங்களுக்கு உதவி வழங்கிவைக்கும் நிகழ்வு



கிராம புறங்களில் பிள்ளைகளின் குறைவு காரணத்தினால் கூடுதலான பாடசாலைகள் மூடப்படும் நிலையில் உள்ளது இதை கருத்தில் கொண்டு ஐரோப்பா வாழ் தமிழ் மக்களின் ஆதரவுடன்

2016 ஓக்ரோபர் மாதம் கன்னி முயற்சியாக மட்ஃ நரிப்புல்தோட்டம் என்னும் கிராமத்தில் பிள்ளைகளின் பிறப்பு வீதத்தை ஊக்குவிக்கும் வகையில் இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பிள்ளைகளை பெற்றெடுத்த  7தாய்மாருக்கு தலா 10000 ரூபா பரிசு தோகையும் பிள்ளை பராமரிப்பு செலவாக மாதம்தோறும் பிள்ளையின்   18வயதுவரை 1000 ரூபா வழங்கப்பட்டுவருகிறது இத்திட்டத்தின் மூலம் இன்று வரை 51 பிள்ளைகள் இவ்வுதவியை பெற்று வருவது குறிப்ளிடதக்கது

அதேவேளை  Londan Birminghamஎன்னும் இடத்தில் வசிக்கும் சமுகசேவகர் சுபாஸ் அவர்கள் இத்திட்டத்தினால் உதவி பெறும் குடும்பங்களை நேரில் சென்று 15.08.2018 பார்வையிட்டதோடு அவர்களின் குறைகளை அங்குள்ள கிராம சேவகர்இகிராமத்து தலைவர்இபொதுதொண்டர்கள்இகோவில் தலைவர் என பலதரப்பட்டோரொடு கலந்து ஆலோசித்து அவர்கள் கூறிய திட்டங்களை செய்து தருவதாக உறுதியளித்துள்ளார் 

நிகழ்வில் சுபாஸ் தெரிவிக்கையில் வெளிநாட்டில் இருக்கும் எனது நண்பர்கள் உட்பட அனைத்து தமிழ் மக்களும் இத்திட்டத்துக்கு உதவி புரிந்து நமது இனத்தை வளர்க்க முன்வரவேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்வதாக கூறினார் அத்துடன் இத்திட்டத்தினை முன்னெடுத்து செல்லும்  சுவிஸ் வாழ் அமுதலிங்கத்துக்கு நன்றி கூறியதுடன் தான் வெளிநாட்டில் இருக்கும் போது தெரியவில்லை இங்கு நேரடியாக வந்து பார்க்கும் போதுதான் நமது இனம் அழிந்துகொண்டு இருப்பது தெரிகிறது அதனால் நண்பர்கள் உட்பட அனைவரும் இத்திட்டத்தை மேலும் முன்னெடுக்க உரியவர்களுடன் தொடர்பு கொண்டு மேலும் ஆலோசனையை பெற்று நமது இனத்தை வளர்த்து எடுப்போம் என தனது ஆதங்கத்தை தெரிவித்து கொண்டார்.

அதேவேளை ஏழைக் குழந்தைகளுக்கு தோடுகுத்தப்பட்டு தங்கத்தில் தோடுகளும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது