ஷீரடி சாய் கருணாலயத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா



ஷீரடி சாய் கருணாலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்வு இன்று 16 ஆம் திகதி அம்பாறை  திருக்கோவில் பகுதியில் அமைந்துள்ள வளாகத்தில் ஷீரடி சாய் கருணாலயத்தின் ஸ்தாபகர் தலைவர் சீதா விவேக் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது பிரதம அதிதியாக அம்பாறை மாவட்டத்தின் பா.உ கவீந்திரன் கோடீஸ்வரன் சிறப்பு அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ். ஜெபராஜன் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ. ஜே அதிசயராஜ் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் பீ.மோகனகாந்தன் திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளர் என். புள்ளநாயகம் திருக்கோவில் ஏ.எஸ்.கே. பண்டார மற்றும் ஆன்மீக அதிதியாக கல்லடி காயத்திரி பீடத்தின் சிவஶ்ரீ. சாம்பசிவ சிவாச்சாரியார் ஆகியோர் என பலரும் கலந்து கொண்டனர்.

இக்கருணாலயத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வானது இன்றைய சுபவேளையில் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த வேதாகமக்கழுவின் குருக்கள்மார்களின்விஷேட யாகத்தின் பின்னர் குறித்த கருணாலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அந்தவகையில் இக்கலுணாலயமானது தாமரைத்தடாகம் கதிர்காம யத்திரியர்களுக்கான தங்குமிடம் அன்னதான மடம் மற்றும் ஷீரடி சாய் பாபாவிற்கான ஆலயம் என அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.