சற்றுமுன்னர் மகிந்தவின் இல்லத்திற்கு சென்ற சி.ஐ.டி


ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக குற்றப்புலனாய்வு பிரிவு, சற்றுமுன்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் இல்லத்திற்கு சென்றுள்ளது.

கொழும்பு - 07 – விஜேராம மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கே குற்றப்புலனாய்வு பிரிவு சென்றுள்ளது.

குற்ற விசாரணை பிரிவின் கூட்டு கொள்ளை விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் உதவி காவல்துறை அதிகாரி உள்ளிட்ட குழுவினர், மகிந்த ராஜபக்ஸவிடம் வாக்குமூலம் பெறவுள்ளனர்.

கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துடன் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரிடமும் முன்னர் குற்ற விசாரணை பிரிவினர் வாக்கு மூலங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.