ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை



ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான விடுமுறையில் கல்வி அமைச்சு மாற்றம் செய்துள்ளது.

இதற்கமைய, அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இன்று (17) முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறை எதிர்வரும் 20 ஆம் திகதி வழங்கப்படவிருந்தது.

எனினும், அதில் மாற்றம் ஏற்படுத்தி அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இன்று முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 27 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.