புகையிரத கட்டண திருத்தங்கள்..


தொடரூந்து பயணக் கட்டணத் சீர் திருத்தத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியில் இருந்து மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி வெளியிடுவதற்கான அமைச்சரவை அனுமதி கோரப்பட்டுள்ளது.

கடந்த பாதீட்டின் போது தொடரூந்து பயண கட்டணத்தை 15 சதவீதத்தினால் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டமையை அடுத்து, தொடரூந்து பயண கட்டணத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ள, தொடரூந்து திணைக்களம் தீர்மானித்தது.

இதற்கமைய, தொடரூந்து பொது முகாமையாளர் தலைமையில் 5 பேர் அடங்கிய குழு ஒன்று அண்மையில் நியமிக்கப்பட்டது.

இதன்போது, தொடரூந்து நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களின் வேதனத்தை அதிகரிப்பது தொடர்பிலும் யோசனை முன்வைக்கப்பட்டது.

தொடரூந்து கட்டண சீர்திருத்தத்திற்கு அமைய, குறைந்த கட்டணமாக உள்ள 10 ரூபாவில் எந்தவிதமாற்றங்களும் மேற்கொள்ளப்படாது.

எனினும், குறைந்த கட்டணத்தில் பயணிக்கக்கூடிய 10 கிலோமீற்றர் தூரம் 7 கிலோமீற்றராக குறைக்கப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.