மட்டக்களப்பு உட்பட மக்களுக்கான எச்சரிக்கை !



நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான காலநிலை தொடரும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மத்திய, சப்ரகமுவ மாகாணங்களுடன் களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீட்டார் அளவான பலத்த மழை பெய்யக்கூடுவதுடன், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.

இதனுடன் வடமேல் மாகாணம், கொழும்பு, கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஊடாக விசேடமாக மத்திய, வடமேல், வடமத்திய, கிழக்கு, தென், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் இடைக்கிடையில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும்.

இதேவேளை, புத்தளம் ஊடாக மன்னார் வரை மற்றும் காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் 60 முதல் 70 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடுவதால், அக்கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.