பெரியநீலாவணையில் இரவு வேளையில் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய பெண்ணின் தாலிக்கொடி தாலிக்கொடி அறுப்பு



(க. விஜயரெத்தினம்)
பெரியநீலாவணை கிராமத்தில் முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த திருடர்களால் ஆலய தரிசனம் செய்திட்டு வீடு திரும்பிய பெண்ணிடம் 11பவுண் தாலிக்கொடி பறித்தெடுக்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணை பிரதான வீதியில் செவ்வாய்க்கிழமை(14) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.பெரியநீலாவணை 2ம் குறிச்சியை சேர்ந்த திருமதி. ஆனந்தகுமாரி சிவகுமார் என்பவரின் 11பவுண் தாலிக்கொடியே இவ்வாறு முகமூடி அணிந்து மோட்டார்சைக்கிளில் வந்த நபர்களால் திட்டமிட்டு திருடர்களால் பறிக்கப்பட்டுள்ளது.

இப்பெண் பெரியநீலாவணை கிராமத்தில் உள்ள விஷ்ணு ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பும் பிரதான வீதியில் வைத்தே இவ்வாறு திருடர்களால் களவாடப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின்தாலிக்கொடியை பறித்துவிட்டு அப்பெண்ணை வீதியிலே தள்ளிவிட்டு மட்டக்களப்பு நெடுஞ்சாலை வீதியில் பயணித்துள்ளார்கள்.

இதனால் மயக்கமடைந்த நிலையில் தலையில் காயங்களுடன் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விடயமாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் தமிழ்பெண்களைச் சேர்ந்த 100 மேற்பட்டவர்களின் தாலிக்கொடிகள் இவ்வாறு திருடர்களின் தீண்டத்தாகத செயற்பாடுகளின் மூலம் பறி கொடுக்கப்பட்டுள்ளது. கல்முனை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.