உள்ளூராட்சி அதிகாரப் பிரதேசங்களில் சனசமூக நிலைய அமைப்பு முறைபற்றிய தெளிவூட்டல் கருத்தரங்கு


(எம்.எம்.ஜபீர்)
உள்ளுராட்சி மன்ற அதிகாரப் பிரதேசங்களில் சனசமூக நிலையங்களை ஸ்தாபித்து சிறப்பாக முன்னெடுப்பது தொடர்பிலாக அம்பாரை மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், ஆணையாளர்கள், செயலாளர்கள் மற்றும் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர்களுக்கு ஜனதாக்ஷன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் தெளிவூட்டல் கருத்தரங்கு நேற்று அம்பாரை ஆரியபவன் விடுதியில் இடம்பெற்றது.

இதன்போது உள்ளுராட்சி மன்ற அதிகார பிரதேசங்களில் சனசமூக நிலையங்களை ஸ்தாபித்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பான திருத்தப்பட்ட அறிவுரைத் தொகுப்பும் வெளியிடப்பட்டு மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், ஆணையாளர்கள், செயலாளர்கள் ஆகியோர்களிடம் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வு கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில் அம்பாரை மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி, மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல், மன்முனை பட்டிப்பளை பிரதேச சபை தவிசாளர் எஸ்.புஸ்பலிங்கம், களனி பல்கலைக்கழக புவியியல்துறை கற்கைகள் நிலையத்தின் தலைவர் கலாநிதி நிஸான்சகலசூரிய, இந்திய அரசின் பஞ்சாயத்து ஆலோசகர் டாக்டர் பாலன், ஜனதாக்ஷன் நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் ஜானக ஹேமதிலக்க, ஜனதாக்ஷன் நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.