சுவீஸ் உதயத்தின் 14 ஆம் ஆண்டு நிறைவு விழா



(சா.நடனசபேசன்)

உறவுகளுக்கு உதவும் கரங்களுடன்  சுவீஸ் உதயத்தின் 14 ஆம் ஆண்டு நிறைவு விழா 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு Gemeinschaft Zentrum  Botenanker .25 ,8040 .Zurich

 எனும் இடத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெறவுள்ளது .


(சா.நடனசபேசன்)

உறவுகளுக்கு உதவும் கரங்களுடன்  சுவீஸ் உதயத்தின் 14 ஆம் ஆண்டு நிறைவு விழா 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு Gemeinschaft Zentrum  Botenanker .25 ,8040 .Zurich
 எனும் இடத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெறவுள்ளது .

இவ் விழாவானது சுவீஸ் உதயத்தின் தலைவர் ரி.சுதர்சன் செயலாளர் வி.ஜெயக்குமார் பொருளாளர்க.துரைநாயகம் மற்றும் நிருவாகசபை உறுப்பினர்கள் இளையோர்கள் ஆதரவாளர்கள் நலன் விரும்பிகள் மற்றும் இன்னும் பலரின் ஆதரவுடன் விழா ஆரம்பமாக இருக்கின்றது.

அத்தோடு கோயிலூர் செல்வராசாவின் கொத்துரொட்டி நூல் அறிமுகமும் அவரது மட்டக்களப்புப் பிரதேச புகழ்கூறும் இன்னிசை நிகழ்வூம் இடம்பெற இருப்பதுடன் இந்நிகழ்வில் எழுத்தாளர் கலாநிதி கல்லாறு சதீஷ் பிரான்ஸில் இருந்து எழுத்தாளர் ஸ்ராலின் ஞானம் அவர்களும்   கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.


இளையராகங்கள் ரஞ்சனின் கரோக்கி இசை மாலை பரதநாட்டிய அபிநயம் சினிமாப்பாடல் அபிநயம் அதிஷ்ரலாபச் சீட்டிலுப்பு கலைஞர் கௌரவிப்பு  சிறுவர்களின்போட்டி நிகழ்வுகள் மற்றும் சுவிஸ்உதயத்தின் இளையோரின் நெறியாள்கையில் விநோத நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன

மண்வாசனையினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கலாசார உணவுகளும் பரிமாறப்பட உள்ளன.
இந்த பிரமாண்டமான நிகழ்வுக்கு ஐரோப்பியவாழ் உறவுகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு சுவிஸ் உதயத்தின் நிருவாகக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.