கொழும்பு துறைமுக நகரின் நிர்மாணப் பணிகள் 90 சதவீதம் பூர்த்தி


கொழும்பு துறைமுக நகரின் நிர்மாணப் பணிகள் அடுத்த வருட நடுப்பகுதி அளவில் பூர்த்தியடையும் என சைனா ஹாபர் எஞ்ஜினியரிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
துறைமுக நகரை மண்ணிட்டு நிரப்பும் பணிகள் 90 சதவீதம் வரை நிறைவு பெற்றிருப்பதாக அந்த நிறுவனத்தின் பிரதான விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் அதிகாரி லியம் தொவ் இலங்கை வர்த்தக சபை ஏற்பாடு செய்த பொருளாதார மாநாடு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நீர்த்தடுப்புச் சுவரின் நிர்மாணப் பணிகள் 75 சதவீதம் வரை நிறைவு பெற்றுள்ளன.

நிர்மாணப் பணிகள் தென்மேற்குப் பருவபபெயர்ச்சிக் காலத்தில் சற்றுத் தடைப்பட்டிருந்த போதிலும் தற்போது இது

வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது.