காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்ததினால் பொதுமக்கள் அச்சமடைந்து தப்பியோட்டம் .!!!


காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்ததினால் பொதுமக்கள் அச்சமடைந்து ஓடினார்கள். அவற்றினை காட்டுக்குள் துரத்தும் நடவடிக்கைகளில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் பொதுமக்களும் இணைந்து செயற்பட்டிருந்தனர்.

இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள கல்மடு மற்றும் வலைவாடி கிராமங்களில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு தொப்பிகல காட்டுப்பிரதேசத்தில் காணப்பட்ட யானைக் கூட்டம் வழமைக்கு மாறாக உணவு தேடி மேற்குறித்த பிரதேசங்களுக்குள்

புகுந்து அட்டகாசத்தில் அட்டகாசத்தில் ஈடுபட்டிருந்ததுடன் தோட்டப்பயிர்களையும் அழித்துள்ளது.
இதனால் பிரதேச மக்கள் அச்சமடைந்து காணப்பட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு பிரதேச கிராமசேவகர் கே.கஜேந்திரராஜா தகவல் வழங்கியமையினையடுத்து குறித்த இடத்திற்கு வருகை தந்த வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகஸ்த்தர்கள் யானைகளை துரத்த பயன்படுத்தும் வெடியினை கொழுத்தி யானைகளை அகற்றும் நடவடிக்கையில் பொலிசார் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் ஈடுபட்டிருந்தனர்.